This Article is From Jun 01, 2020

நாடு முழுவதும் ஒரே நாளில் 8,392 பேருக்கு கொரோனா! மொத்த பாதிப்பு 1.90 லட்சமாக உயர்வு!!

கடந்த 24 மணி நேரத்தில் 8,392 பேர் தொற்றால் புதியதாக பாதிக்கப்பட்டவர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர். 230 பேர் உயிரிழந்துள்ளனர்.

நாடு முழுவதும் ஒரே நாளில் 8,392 பேருக்கு கொரோனா! மொத்த பாதிப்பு 1.90 லட்சமாக உயர்வு!!

நாடு முழுவதும் கொரோான தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையானது தொடர்ந்து அதிகரித்து வருகின்றது. அந்த வகையில் இன்று ஒட்டு மொத்தமாக 1,90,535 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டிருக்கின்றனர். 93,322 பேர் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். 91,819 பேர் குணமடைந்துள்ளனர். உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையானது 5,394 ஆக அதிகரித்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் 8,392 பேர் தொற்றால் புதியதாக பாதிக்கப்பட்டவர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர். 230 பேர் உயிரிழந்துள்ளனர். தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் முதன் முறையாக 1,000க்கும் அதிகமானவர்கள் தொற்றால் புதியதாக பாதிக்கப்பட்டவர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், பிரான்ஸ் நாட்டை பின்னுக்குத் தள்ளி, கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட உலக நாடுகள் வரிசையில் இந்தியா 8வது இடத்திற்கு முன்னேறியுள்ளது. மத்திய அரசு “அன்லாக் 1“ என்கிற பெயரில் இம்மாதம் 30 வரை முழு முடக்க நடவடிக்கை தளர்வுகளுடன் நீட்டிப்பதாக அறிவித்திருந்தது. தளர்வுகளின் ஒரு பகுதியாக மாநிலங்களுக்கிடையேயான போக்குவரத்துக்கு அனுமதியும் வழங்கப்பட்டுள்ளது. மகாராஷ்டிரா, தமிழகம்  மற்றும் ஆந்திரப்பிரதேசம் போன்ற மாநிலங்கள் தங்கள் மாநிலங்களில் ஊரடங்கினை நீட்டிப்பதாக தெரிவித்துள்ளன. 68 நாட்களுக்கு பிறகு மத்திய அரசு பொருளாதாரத்திற்கு முக்கியத்துவத்தினை வழங்கியுள்ளது.

  • நாட்டில் ஒட்டு மொத்தமாக குணமடைந்தோரின் விகிதம் 48.19 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை 91,819 பேர் குணமடைந்துள்ளனர் மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
  • தற்போது உறுதி செய்யப்பட்டிருக்கும் மொத்த எண்ணக்கையிலும் வெளிநாட்டை சேர்ந்தவர்களும் அடங்கியுள்ளனர்.
  • நாட்டில் அதிக தொற்று பாதிப்புகளைக் கொண்ட மாநிலத்தில் முதல் இடத்தில் உள்ள மகாராஷ்டிராவில்  67,655 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் அம்மாநில அரசு பல தளர்வுகளை அறிவித்துள்ளது. இம்மாதம் 8-ம் தேதியிலிருந்து மூன்று கட்டங்களாக தளர்வுகள் நடைமுறைப்படுத்தப்படும் என கூறியுள்ளது. முன்னதாக, பொது வெளியில் நடை பயிற்சி மேற்கொள்ளவும், இரவு ஊரடங்கில் நேர மாற்றத்தையும் அரசு அறிவித்திருந்தது.  
  • தமிழகம் இரண்டாவது முறையாக ஆயிரத்தினை கடந்த அளவில் கொரோனா தொற்றினை கண்டறிந்துள்ளது. நேற்றை அறிவிப்பின்படி மாநிலம் முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் 1,149 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இதன் மூலமாக மாநிலத்தில் மொத்த பாதிப்பு எண்ணிக்கையானது 22,333 ஆக அதிகரித்துள்ளது. உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையானது 173 ஆக உயர்ந்துள்ளது.
  • மாநிலத்திற்கு வெளியே பணிப்பதற்கான தளர்வுகளை கர்நாடக அரசாங்கம் நேற்று அறிவித்திருந்தது. இந்த தளர்வுகள் மகாராஷ்டிரா மாநிலத்திற்கு பயணிப்பவர்களுக்கு பொருந்தாது.
  • அசாம் மாநிலத்தில் கொரோனா தொற்று பரிசோதனை ஒரு லட்சத்தினை கடந்துள்ளதாகா அம்மாநில சுகாதார அமைச்சர் ஹிமந்தா பிஸ்வா சர்மா தெரிவித்துள்ளார். இந்த எண்ணிக்கையானது கேரளாவைக் காட்டிலும் அதிகமாகும். மாநிலத்தில் உள்ள 7 சோதனை மையங்களில் கடந்த 20 நாட்களில் 70 ஆயிரத்திற்கும் அதிகமான சோதனைகள் மேற்கொள்ளப்பட்டிருப்பதாக அவர் தெரிவித்திருந்தார்.
  • தொற்று பரவலுக்கு உள்ளாகாத மாநிலமான மிசோரம், ஊரடங்கினை இம்மாத இறுதி வரை நீட்டித்துள்ளதாக அறிவித்துள்ளது. மற்ற வடகிழக்கு மாநிலங்களில் தொற்று பரவல் உள்ள காரணத்தினாலும், இதர மாநிலங்களிலிருந்து திரும்பும் புலம் பெயர் தொழிலாளர்களாலும் ஊரடங்கை நீட்டிப்பதாக அரசு தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.

.