This Article is From Aug 06, 2018

கார் பார்க்கிங்கில் விபத்துக்குள்ளான விமானம் - 5 பேர் பலி

கலிஃபோர்னியாவின் சான்டா அனா என்ற நகரத்தில் சிறிய ரக விமானம் ஒன்று விபத்துக்குள்ளானதில் 5 பேர் பலியாகினர்

கார் பார்க்கிங்கில் விபத்துக்குள்ளான விமானம் - 5 பேர் பலி
Los Angeles:

அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாகாணத்தில் சிறிய ரக விமானம் ஒன்று விபத்துக்குள்ளானதில் 5 பேர் பலியாகினர். சான்டா அனா என்ற நகரத்தில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

இரண்டு இன்ஜின்கள் கொண்ட அந்த விமானம் சவுத் கோஸ்ட் பிளாசா அருகே விழுந்து நொருங்கியது. அந்த வணிக மையத்தின் கார் பார்க்கிங்கில் கட்டுப்பாட்டை இழந்தை அந்த விமானம் விழுந்துள்ளது. அதில் 5 பேர் பலியாகினர்

இந்த விபத்தில் விமானத்தில் பயணிக்காதவர்கள் யாரும் பலியாகினரா என்ற தகவல் இன்னும் கிடைக்கவில்லை. இந்த விமானம் சான் ஃபிரான்சிஸ்கோவைச் சேர்ந்த நிறுவனத்துக்கு சொந்தமானது என தெரியவந்துள்ளது.

விபத்துக்குள்ளாவதற்கு முன் அவசரகால தரையிறக்கம் செய்வதாக செஸ்னா 414 என்ற அந்த விமானத்தில் இருந்து தகவல் கிடைத்துள்ளது. விபத்து குறித்து மேலும் விசாரணை நடந்து வருகிறது.

.