This Article is From Oct 01, 2018

சர்வதேச காபி தின ஸ்பெஷல்: காபி குடிப்பதனால் இவ்வளவு நன்மைகளா?

காபியினால் ஏற்படும் நன்மைகளை பற்றி தெரிந்து கொண்டு, ஒரு கப் எக்ஸ்ட்ரா குடிக்கலாம்!

சர்வதேச காபி தின ஸ்பெஷல்: காபி குடிப்பதனால் இவ்வளவு நன்மைகளா?

காபி பிரியரா நீங்கள்? அப்போ இந்த நாள் நீங்க கொண்டாட வேண்டிய தினம். ஏனா, இன்னிக்கு சர்வதேச காபி தினமாம்! எஸ்ப்ரஸ்ஸோ, லேட்டே, அமெரிக்கானோ என விதவிதமான காபி வகைகள் இருந்தாலும், அனைத்து வகைகளையும் விரும்பி பருகும் காபி பிரியர்களே, காபி குடிப்பதனால் ஏற்படும் நன்மைகள் பற்றி தெரியுமா?
இந்த கட்டுரையில், காபியினால் ஏற்படும் நன்மைகளை பற்றி தெரிந்து கொண்டு, ஒரு கப் எக்ஸ்ட்ரா குடிக்கலாம்!

காபி குடிப்பதினால் ஏற்படும் நன்மைகள்

1. டைப்-2 நீரிழிவு நோய் பாதிப்பு குறையும்

மினரல்ஸ், மெக்னீசியம், க்ரோமியம் ஆகிய சத்துக்கள் நிறைந்த காபி, உடலில் உள்ள இன்சுலினை பயன்படுத்துவதனால், க்ளூகோஸ் அளவை குறைக்கிறது. எனவே, காபி குடிப்பதன் மூலம், டைப்-2 நீரிழிவு நோய் பாதிப்புகளை 9% குறைக்க வாய்ப்புள்ளதாக ஹாவார்டு பல்கலைக்கழக ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது

2. கல்லீரல் ஆரோக்கியம்

காபியில் உள்ள பாதுகாப்பு அமிலங்கள், உடல் கல்லீரலி ஆரோக்கியத்திற்கு பங்காற்றுவதாக ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

3. உடல் எடை குறைக்க

க்ரீன் காபி, ப்ளாக் காபி குடிப்பதனால், அதில் உள்ள க்ளோரோஜெனிக் அமிலம் உடலில் சுரக்கும் க்ளுகோஸ் அளவை கட்டுக்குள் வைக்கின்றன. இதனால், உடல் எடை குறையும் என்று மருத்துவ நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்

4. உடல் ஆற்றல்

காபி குடிப்பதனால், உடலுக்கு தேவையான எனர்ஜி உடனடியாக கிடைக்கின்றது. சர்க்கரை அல்லது இனிப்பு பொருட்களை சேர்க்காமல் காபி குடிப்பது குறைந்த கலோரிகளை கொண்டிருக்கும்.

5. இருதய ஆரோக்கியம்

காபி குடிப்பவர்களுக்கு, இருதய நோய் பாதிப்புகள் ஏற்படுவது குறையும் என்று ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

.