This Article is From Oct 01, 2018

நீரிழிவு நோயா? கறிவேப்பிலை சாப்பிடுங்க!

இந்திய மற்றும் இலங்கை போன்ற நாடுகளில் விளையும் இந்த கறிவேப்பிலை மருத்துவ குணம் கொண்ட தாவரம்

நீரிழிவு நோயா? கறிவேப்பிலை சாப்பிடுங்க!

கறிவேப்பிலையில் நார்ச்சத்து மிகுதியாக உள்ளது.

இந்திய மற்றும் இலங்கை போன்ற நாடுகளில் விளையும் இந்த கறிவேப்பிலை மருத்துவ குணம் கொண்ட தாவரம். இந்த தாவரம் வெப்பமண்டலத்தில் மட்டுமே வளர கூடியது. பெரும்பாலான இந்திய மற்றும் இலங்கை உணவு பதார்த்தங்களில் சேர்க்கப்படும் இந்த கறிவேப்பிலை ருசி மற்றும் இதன் மணத்திற்கு மிகவும் பிரசித்தி பெற்றது. முறையா கோணிகி ஸ்பிரெங் என்ற அறிவியல் பெயர் பெற்ற இந்த கறிவேப்பிலை கால்ஷியம், காப்பர், மக்னீசியம், பாஸ்பரஸ், அயன் போன்ற உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துக்களை உள்ளடக்கியது. மேலும் இதில் நார்ச்சத்து மிகுதியாக இருப்பதால், செரிமானம் தூண்டப்பட்டு, உடலில் உள்ள கழிவுகள் வெளியேற்றப்படுகிறது. நச்சுக்கள் வெளியேறுவதால், சரும பிரச்சனைகள் வராமல் தடுத்து, உடல் எடை குறைப்பிலும் பெரும்பங்கு வகிக்கிறது கறிவேப்பிலை. தலைமுடி வளர்ச்சியை தூண்டுகிறது மற்றும் இளநரையை தடுக்க உதவுகிறது. கறிவேப்பிலை உடலில் கொலஸ்ட்ராலை சீராக வைக்கிறது. கறிவேப்பிலையின் பொதுவான குணங்கள் இவை. நீரிழிவு நோயை கறிவேப்பிலை கட்டுப்படுத்துகிறது என்றால் உங்களால் நம்ப முடிகிறதா? ஆம். கறிவேப்பிலை உடலில் எப்படி செயல் படுகிறதென்பதை தெரிந்து கொள்ளுங்கள்.

கறிவேப்பிலையின் பயன்கள்

மேற்கூறியதுபோல், கறிவேப்பிலையில் நார்ச்சத்து மிகுதியாக உள்ளது. இந்த நார்ச்சத்தானது செரிமானத்தை தாமதப்படுத்தும். இதனால், உடலில் வளற்சிதை மாற்றமும் தாமதமாகி, இரத்தத்தில் சர்க்கரையின் அளவு சீராக இருக்கும். கணையத்தில் இன்சுலின் சுரப்பை தூண்டுவதில் கறிவேப்பிலைக்கு முக்கிய பங்கு உண்டு. உங்கள் உடல் இன்சுலின் சுரப்பிற்கு நன்கு இசைவு கொடுத்தால், தானாகவே இரத்தத்தில் சர்க்கரையின் அளவு குறைந்து சீராகும். சர்வதேச மருந்து அறிவியல் ஆராய்ச்சி வெளியிட ஆய்வு தகவலின் படி, கறிவேப்பிலையில் இருக்கக்கூடிய ஆன்டி-ஹைப்பர்க்ளைசமிக் தன்மை இரத்த சர்க்கரையின் அளவை கட்டுக்குள் வைக்க உதவுகிறது.
 

ml97i7ro

மேலும், தினமும் 200mg அளவு கறிவேப்பிலையை தொடர்ச்சியாக ஒரு மாதம் சாப்பிட்டு வர இரத்த சர்க்கரை, யூரிக் அமிலம், யூரியா, க்ரெடினின், கிளைகோசிலேட்டட் ஹீமோகுளோபின் போன்றவை குறையும். இவை, இரத்த சர்க்கரை கொண்ட எலியை வைத்து பரிசோதனை செய்து நிரூபணமான ஒன்று.

எப்படி சாப்பிடலாம்?

தினமும் காலை வெறும் வயிற்றில் 8 முதல் 10 கறிவேப்பிலை இலையை நன்கு மென்று சாப்பிட்டு வரலாம் அல்லது இலையை அரைத்து அதன் சாற்றை அருந்தலாம். தினசரி உணவில் மற்றும் சாலட் போன்றவற்றில் இதனை சேர்த்து சாப்பிடலாம். அனைத்து வயதினரும் உண்ணக்கூடிய இந்த தாவரத்தில் மருத்துவ குணம் மிகுதியாக உள்ளது. இனி சாப்பிடும்போது கறிவேப்பிலையை ஓரமாக ஒதுக்கி வைக்க வேண்டாம். உணவோடு சேர்த்து சாப்பிட உடல் நலனிற்கு மிகவும் நல்லது.

.