This Article is From Oct 10, 2018

உ.பி ரேபரேலியில் தடம்புறண்ட ரயில்: 7 பேர் பலி!

டெல்லியிலிருந்து மேற்கு வங்கத்துக்கு சென்று கொண்டிருந்த ரயில் ஒன்று ரேபரேலியில் இன்று தடம்புறண்டு விபத்துக்கு உள்ளானது

டெல்லியிலிருந்து புறப்பட்ட ஃபராக்கா எக்ஸ்பிரஸ் ரயிலின் 8 பெட்டிகள், ஹர்சந்த்பூர் ரயில் நிலையத்தில் தடம் புறண்டது

New Delhi:

டெல்லியிலிருந்து மேற்கு வங்கத்துக்கு சென்று கொண்டிருந்த ரயில் ஒன்று ரேபரேலியில் இன்று தடம்புறண்டு விபத்துக்கு உள்ளானது. இந்த விபத்தில் இதுவரை 7 பேர் பலியாகியுள்ளதாகவும் 30 பேர் காயமடைந்துள்ளதாகவும் தகவல் தெரிவிக்கப்படுகிறது. 

டெல்லியிலிருந்து புறப்பட்ட ஃபராக்கா எக்ஸ்பிரஸ் ரயிலின் 8 பெட்டிகள், ஹர்சந்த்பூர் ரயில் நிலையத்தில் இன்று காலை 6:05 மணிக்கு தடம் புறண்டது. ரயில், மேற்கு வங்க மல்டாவுக்கு சென்று கொண்டிருந்தது குறிப்பிடத்தக்கது. 

விபத்து நடந்ததை அடுத்து, வாரணாசி மற்றும் லக்னோவிலிருந்து தேசிய பேரிடர் மீட்புப் படையினர் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். அவர்கள், பெட்டியில் சிக்கியிருக்கும் பயணிகளை தொடர்ந்து மீட்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். 

விபத்தில் காயமடைந்தவர்களுக்கு சிகிச்சை அளிக்க, ஒரு மருத்துவக் குழுவும் சம்பவ இடத்துக்கு விரைந்துள்ளது. விபத்து நடந்த வழியாக செல்லும் அனைத்து ரயில்களையும் ரத்து செய்துள்ளது ரயில்வே துறை. விபத்தில் பலியானோர் எண்ணிக்கை உயரக்கூடும் என்று அஞ்சப்படுகிறது. 

உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், விபத்தில் இறந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும் அவர், போலீஸ் எஸ்.பி, மீட்புப் படையினர், மருத்துவக் குழுவினர் ஆகியோரிடம் வேண்டிய அனைத்து உதவிகளையும் செய்யுமாறு பணித்துள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.


 

.