This Article is From Mar 01, 2019

காஷ்மீரில் தீவிரவாதிகளுடனான மோதலில் 4 ராணுவ வீரர்கள் வீரமரணம்!

தீவிரவாதிகள் உயிரிழந்துவிட்டதாக கருதிய நிலையில், தாக்குதல் நடத்தப்பட்ட வீட்டின் இடிபாடுகளிலிருந்து துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர்.

காஷ்மீரில் தீவிரவாதிகளுடனான மோதலில் 4 ராணுவ வீரர்கள் வீரமரணம்!

சிஆர்பிஎஃப்-ன் தளபதி உட்பட 8 வீரர்கள், இந்த தாக்குதலில் காயமடைந்துள்ளனர்.

Sringar:

குப்வாரா: ஜம்மு காஷ்மீரில் தீவிரவாதிகளுடன் நடந்த மோதலில் ஒரு அதிகாரி உட்பட 4 ராணுவ வீரர்கள் வீரமரணம் அடைந்துள்ளனர்.

தீவிரவாதிகளை அழிக்கும் ஆபரேஷனில் ஈடுபட்டிருந்த போது, தீவிரவாதிகள் நடத்திய துப்பாக்கி சூட்டில் சிஆர்பிஎஃப் வீரர் ஒருவர் உட்பட ஜம்மு - காஷ்மீர் போலீசார் இருவர் உயிரிழந்துள்ளனர்.

தீவிரவாதிகள் உயிரிழந்துவிட்டதாக கருதிய நிலையில், தாக்குதல் நடத்தப்பட்ட வீட்டின் இடிபாடுகளிலிருந்து துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

சிஆர்பிஎஃப்-ன் தளபதி உட்பட 8 வீரர்கள், இந்த தாக்குதலில் காயமடைந்துள்ளனர்.

முன்னதாக, இந்த தாக்குதலில் இரண்டு தீவிரவாதிகள் கொல்லப்பட்டதாக பாதுகாப்பு படை அதிகாரிகள் தெரிவித்திருந்தனர்.

.