This Article is From May 07, 2020

ஆந்திராவில் ரசாயன வாயு கசிவு; 11 பேர் பலி! 1000 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல்!!

விசாகப்பட்டினத்தின் ஆர்.ஆர் வெங்கடபுரம் கிராமத்திலுள்ள எல்.ஜி. பாலிமர்ஸ் இந்தியா பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் ரசாயன எரிவாயு ஆலைக்கு அருகில் வசிப்பவர்கள் கண் எரிச்சல் சுவாசிப்பதில் சிரமம் இருப்பதாகத் தெரிவித்துள்ளதாக அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.

ஆந்திராவில் ரசாயன வாயு கசிவு; 11 பேர் பலி! 1000 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல்!!

நச்சு வாயு கசிந்ததில் ஒரு குழந்தை உட்பட மூன்றுபேர் உயிரிழந்துள்ளனர்

New Delhi:

ஆந்திராவின் விசாகப்பட்டினத்தில் உள்ள ஒரு பன்னாட்டு ரசாயன ஆலையிலிருந்து நச்சு வாயு கசிந்ததில் ஒரு குழந்தை உட்பட 11 பேர் உயிரிழந்துள்ளனர் என ஏ.என்.ஐ செய்தி நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது.

விசாகப்பட்டினத்தின் ஆர்.ஆர் வெங்கடபுரம் கிராமத்திலுள்ள எல்.ஜி. பாலிமர்ஸ் இந்தியா பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் ரசாயன எரிவாயு ஆலைக்கு அருகில் வசிப்பவர்கள் கண் எரிச்சல், சுவாசிப்பதில் சிரமம் இருப்பதாகத் தெரிவித்துள்ளதாக அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.

இந்த விபத்தில் பாதிக்கப்பட்ட, 200க்கும் அதிகமானோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்தினால் சுமார் 1,000 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும் தெரிவிக்கப்படுகிறது. கோபால்பட்டினத்தில் எல்ஜி பாலிமர் நிறுவனத்தில் எரிவாயு கசிவு அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அப்பகுதியிலிருந்து யாரும் வீடுகளைவிட்டு வெளியில் வர வேண்டாம் என கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளதாகவும் விசாகப்பட்டின மாநகராட்சி ட்விட்டரில் தெரிவித்துள்ளது.

இந்த விபத்து ஏற்பட்டவுடன் மக்களுக்கு பலர் உதவியுள்ளனர். நூற்றுக்கணக்கானோர் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ குறுக்கும் நெடுக்குமாக ஓடிக்கொண்டிருக்கிறார்கள். பாதிக்கப்பட்டவர்களை ஆம்புலன்சில் ஏற்றுவதையும், சுவாச கோளாறு உள்ளவர்களை தங்கள் தோளில் சுமந்துகொண்டு மீட்டுச் செல்வதையும் படத்தில் காண முடிகிறது.

  • விபத்து ஏற்பட்ட போது மேலெழுந்த ரசாயன கசிவிலிருந்து தப்பித்துக்கொள்ள, பைக்கில் சென்ற இருவர் பள்ளத்தில் விழுந்து உயிரிழந்தனர். அதேபோல ஒரு பெண் இரண்டாவது மாடிக் கட்டிடத்திலிருந்து விழுந்து உயிரிழந்துள்ளார். ஸ்கூட்டர் அருகில் நின்றுகொண்டிருந்த பெண் திடீரென மயங்கி விழுவது வீடியோ ஒன்றில் பதிவாகியுள்ளது.
  • விசாகப்பட்டினத்தின் தெருக்களில் பல ஆண்களும் பெண்களும் மயங்கி வீழ்ந்துள்ளதைப் பல வீடியோக்களில் காண முடிகின்றது. குறைந்தபட்சம் நூறுபேராவது மயங்கியிருப்பார்கள்.  முககவசம் அணிந்தவர்கள் மயங்கிய நபர்களை ஆம்புலன்ஸ் நோக்கி தூக்கிச் சென்றவாறு இருக்கின்றனர்.
  • இந்த நிகழ்வு நள்ளிரவில் பாலிமர் ஆலையை மறுதொடக்கம் செய்ய முயன்றபோது நடந்துள்ளது. பகல் பொழுதுகளில் நடந்திருந்தால் குறிப்பிட்ட இடத்தினை விட்டு வேறு இடங்களுக்கு இடம்பெயர வாய்ப்பு இருந்திருக்கும். என முதல்வரின் சிறப்பு தலைமை செயலாளரான பி.வி. ரமேஷ். கூறியுள்ளார்.
  • சம்பந்தப்பட்ட ஆலையின் அருகாமையில் வசிப்பவர்களுக்கு ரசாயன வாயு வெளியேற்றம் காரணமாக கண் எரிச்சலும், தோல் எரிச்சலும் ஏற்பட்டதாகவும், கடுமையான மூச்சு திணறல் ஏற்பட்டதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர். இம்மாதிரியாக ரசாயன வாயுவை நீண்ட நேரம் சுவாசித்தால் அது சுவாச பிரச்சனை மட்டுமல்லாமல், நரம்பு மண்டலத்தையும், சிறுநீரகத்தையும் பாதிக்கும்.
  • ரசாயன ஆலையை சுற்றி 3 கி.மீ பரப்பளவில் உள்ள மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். மருத்துவமனைகளில் இரண்டு மூன்று நபர்கள் மயங்கியவாறு ஒரே படுக்கையில் சிகிச்சைக்காக காத்திருக்கும் காட்சிகளை வீடியோக்களில் காணமுடிகிறது. இதில் பெரும்பாலும் குழந்தைகளே அதிகம் உள்ளனர்.
  • லாக்டவுன் நடவடிக்கை காரணமாக 5000 டன் அளவிலான ரசாயனம் தொழிற்சாலையிலேயே வைக்கப்பட்டிருந்தது. வெப்பநிலை சமமின்மை காரணமாக ரசாயனம் வேதியியல் மாற்றமடைந்து வெளியேறியுள்ளது என விசாகப்பட்டினத்தின் போலீஸ் அதிகாரி ஸ்வரூப் ராணி AFP  செய்தி நிறுவனத்திடம் கூறியுள்ளார்.
  • சம்பந்தப்பட்ட தொழிற்சாலையின் அருகில் வசிப்பவர்கள் வீட்டிற்குள்ளேயே இருக்குமாறும், ஈரமான துணிகளை முககவசமாக பயன்படுத்துமாறும் விசாகப்பட்டினம் மாநகராட்சி அறிவித்துள்ளது.
  • 1961 ஆம் ஆண்டில் இந்துஸ்தான் பாலிமர்ஸ் என இருந்த நிறுவனத்தைத் தென் கொரியாவின் எல்ஜி செம் கைப்பற்றிய பின் இது 1997 ஆம் ஆண்டில் எல்ஜி பாலிமர்ஸ் இந்தியா என்கிற பெயரில் இயங்கத் தொடங்கியது. பாலிஸ்டிரீனை உருவாக்கும் இந்த நிறுவனமானது பல்துறை பிளாஸ்டிக் உபகரணங்களைத் தயாரிக்கிறது.
  • இந்நிலையில் ரசாயன வாயு கசிவு நிலைமை தற்போது கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாகவும், இந்த வாயுவை சுவாசித்தவர்களுக்கான சிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாகவும் ரசாயன வாயு கசிவுக்கு காரணமான எல்.ஜி செம் (LG Chem) நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும், இந்த வாயு கசிவினால் ஏற்பட்ட உயிரிழப்புகளுக்கும், கசிவுக்குமான காரணத்தினை ஆராய்ந்து வருகிறோம் என அந்நிறுவனத்தின் அறிக்கை கூறியுள்ளது.
  • இந்த சம்பவத்தை பலர் 1984-ல் நிகழ்ந்த போபால் விச வாயு கசிவு சம்பவத்தோடு ஒப்பிடுகின்றனர். யூனியன் கார்பைடு பூச்சிக் கொல்லி மருந்து தயாரிக்கும் நிறுவனத்தின் தொழிற்சாலையிலிருந்து வெளியேறிய ரசாயன நச்சு வாயுவால் கிட்டதட்ட ஒரு லட்சத்திற்கும் அதிகமான மக்கள் நாள்பட்ட நோய்களுக்கு ஆளாகினர். 3,500க்கும் அதிகமான மக்கள் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
.