This Article is From Oct 22, 2018

இந்திய ரயில்வேயில் 2907 தொழிற்பயிற்சி காலியிடங்கள்

தொழிற்பயிற்சி காலியிடங்களில் சேர்வதற்கு நவம்பர் 14-ம் தேதி வரைக்கும் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது

இந்திய ரயில்வேயில் 2907 தொழிற்பயிற்சி காலியிடங்கள்

வயது வரம்பு 15-24- வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

New Delhi:

தொழிற்பயிற்சி (Apprentices) சட்டம் 1961 மற்றும் தொழிற்பயிற்சி விதிகள் 1992- ஆகயிவற்றின் அடிப்படையில் கிழக்கு ரயில்வே தொழிற்பயிற்சிக்கான விண்ணப்பங்களை வரவேற்கிறது. இதனை கிழக்கு ரயில்வேயின் இணைய தளத்தில் சென்று விண்ணப்பிக்க வேண்டும்.

இதில் தேர்வு செய்யப்படுபவர்கள் ஹவுரா, சீல்டா, மால்டா, ஆசன்சோல், கஞ்ச்ரபாரா, லிலுவா, ஜமால்பூர் ஆகிய மண்டலங்களில் பணிக்கு அமர்ததப்படுவார்கள்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை சமர்ப்பிக்க நவம்பர் 14-ம்தேதி கடைசி நாள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. வயது வரம்பை பொறுத்தவரையில் ஜனவரி 1, 2019-ம் தேதியன்று 15-24 வயதுடையவராக இருக்க வேண்டும்.

இதில் எஸ்.சி/எஸ்.டி பிரிவினருக்கு 5 ஆண்டுகளும், ஓ.பி.சி. பிரிவினருக்கு 3 ஆண்டுகளும், மாற்றும் திறனாளிகளுக்கு 10 ஆண்டுகளும் வயது வரம்பு தளர்த்தப்பட்டுள்ளன.

விண்ணப்பதாரர்கள் 10-ம் வகுப்பில் குறைந்தது 50 சதவீத மதிப்பெண்களும், ஐ.டி.ஐ. தேர்வானதற்கான சான்றிதழும் பெற்றிருக்க வேண்டும். எஸ்.சி., எஸ்.டி., மாற்றுத் திறனாளிகள் ஆகியோரைத் தவிர மற்றவர்களுக்கு ரூ. 100 விண்ணப்ப கட்டணம் வசூலிக்கப்படும். இதனை ஆன்லைனில் மட்டுமே செலுத்த முடியும்.

 

.