This Article is From Oct 19, 2018

மத்திய உளவுத் துறையில் 1054 காலிப் பணியிடங்கள்

உதவி பாதுகாப்பு அலுவலர், அதிகாரி என 1054 காலிப் பணியிடங்கள் மத்திய உளவுத்துறையில் உள்ளன. இதுகுறித்த விவரம் வெளியிடப்பட்டுள்ளது

மத்திய உளவுத் துறையில் 1054 காலிப் பணியிடங்கள்

20-ம்தேதி முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்

New Delhi:

மத்திய உளவுத்துறையில் உள்ள காலிப்பணியிடங்கள் குறித்த விவரங்கள் தற்போது வெளியிடப்பட்டுள்ளன. உதவி பாதுகாப்பு அலுவலர், அதிகாரி என 1054 காலிப் பணியிடங்கள் மத்திய உளவுத்துறையில் உள்ளன. இதில் தேர்வு செய்யப்படுவோர் உளவுப் பிரிவு, உள்துறை அமைச்சகம் உள்ளிட்ட இடங்களில் பணிக்கு அமர்த்தப்படுவார்கள்.

இதற்கான விண்ணப்பங்கள் ஆன்லைனில் வரவேற்கப்படுகின்றன. அக்டோபர் 20-ம்தேதி முதல் இந்த பதவிகளுக்கு விண்ணப்பிக்கலாம்.

முக்கியமான தேதிகள்

ஆன்லைன் விண்ணப்பம் தொடக்கம் – அக்டோபர் 20, 2018

விண்ணப்பிக்க கடைசி தேதி – நவம்பர் 10,2018

தேர்வுக் கட்டணம் செலுத்த கடைசி தேதி – நவம்பர் 13, 2018

விண்ணப்பம் செய்வோர்+2 முடித்திருக்க வேண்டும். பொதுப்பிரிவினருக்கான வயது வரம்பு 27. எஸ்.சி., எஸ்.டி.-க்கு 5 ஆண்டுகளும், ஓபிசி பிரிவுக்கு 3 ஆண்டுகளும் வயது வரம்பு தளர்த்தப்பட்டுள்ளது.

மத்திய உள்துறை அமைச்சக இணைய தளத்தில் (www.mha.gov.in) or NCS portal (www.ncs.gov.in) விண்ணப்பிக்க வேண்டும். 3 கட்டமாக தேர்வு நடத்தப்படும். இதுகுறித்த விவரம் விரைவில் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

.