This Article is From Jun 26, 2020

கொரோனா பாதிப்பால் ஏற்பட்ட பொது முடக்கத்தால் 250 இந்தியர்கள் பாகிஸ்தானில் சிக்கித் தவிப்பு!

ஒரே நேரத்தில் ஒட்டுமொத்த  உலக நாடுகளிலும் பரவி, கொரோனா வைரஸ் ஆட்டிப்படைத்து வருகிறது.  தொற்றை கட்டுக்குள் கொண்டு வருவதற்காக பெரும்பாலான நாடுகள் பொது முடக்கத்தை நடைமுறைப்படுத்தியுள்ளன.

கொரோனா பாதிப்பால் ஏற்பட்ட பொது முடக்கத்தால் 250 இந்தியர்கள் பாகிஸ்தானில்  சிக்கித் தவிப்பு!

கொரோனா பாதிப்பு காரணமாக சர்வதேச எல்லைகள் மூடப்பட்டுள்ளன.

ஹைலைட்ஸ்

  • கொரோனா பாதிப்பால் சர்வதேச எல்லைகள் மூடப்பட்டுள்ளன
  • பாகிஸ்தானுக்கு சென்ற இந்தியர்கள் நாடு திரும்ப முடியாமல் தவிப்பு
  • 250 பேர் பல்வேறு இடங்களில் சிக்கியுள்ளதாக தகவல்
Lahore:

கொரோனா பாதிப்பால் ஏற்படுத்தப்பட்டிருக்கும் பொது முடக்கத்தால்,  இந்தியர்கள் 250 பேர் பாகிஸ்தானில் சிக்கித் தவித்து வருகின்றனர். அவர்கள் நாளை மீட்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. 

ஒரே நேரத்தில் ஒட்டுமொத்த  உலக நாடுகளிலும் பரவி, கொரோனா வைரஸ் ஆட்டிப்படைத்து வருகிறது.  தொற்றை கட்டுக்குள் கொண்டு வருவதற்காக பெரும்பாலான நாடுகள் பொது முடக்கத்தை நடைமுறைப்படுத்தியுள்ளன.

பாகிஸ்தானிலும் படிப்படியாக பாதிப்பு  அதிகரித்து வரும் நிலையில்,  அங்கும் பொது முடக்கம் போடப்பட்டுள்ளது. 

இதனால் பல்வேறு காரணங்களுக்காக பாகிஸ்தான் சென்ற இந்தியர்கள் நாடு திரும்ப முடியாமல் தவித்து வருகின்றனர். பல்வேறு சிக்கல்களுக்கு பின்னர்,  அவர்களை இந்தியா கொண்டுவர  நடவடிக்கை எடுக்கப்பட்டது.

அந்த வகையில் இன்று இந்தியா - பாகிஸ்தான் எல்லையான லாகூரின் வாகாவில்,  எல்லைக் கதவு திறக்கப்பட்டது. இதன் வழியே 248 இந்தியர்கள் நாடு திரும்பியுள்ளனர்.

இன்றும் 250  பேர் பாகிஸ்தானில் சிக்கித் தவிப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அவர்கள் புறப்பட்டு விட்டதாகவும், கொரோனா பாதிப்பு மற்றும் சர்வதேச எல்லை மூடப்பட்டதால் அவர்கள் இன்னும் நாடு திரும்பவில்லை என்றும் பாகிஸ்தான் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது. 

அவர்கள் நாளை இந்தியா திரும்பி விடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

.