This Article is From Jul 14, 2019

சந்திராயான் -2 : கவுண்ட் டவுண் தொடங்கியது

Chandrayaan-2 Launch Time: இந்த ஏவுகணை வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டால் விண்வெளி ஆய்வு மையமான இஸ்ரோவுக்கு மிகப்பெரிய சாதனையாக இருக்கும். இது அமெரிக்க விண்வெளி நிறுவனமான நாசாவைவிட கிட்டத்தட்ட 20 மடங்கு குறைவாக பட்ஜெட்டைக் கொண்டுள்ளது.

ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் இருந்து விண்ணில் ஏவப்பட உள்ளது.

ஹைலைட்ஸ்

  • சந்திராயன் -2 நாளை அதிகாலை 2:51க்கு விண்ணில் ஏவப்படவுள்ளது
  • குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் இதை நேரில் பார்வையிடவுள்ளார்.
  • சந்திராயன் 2- நிலவுக்கு அனுப்பப்படும் 2வது விண்கலம் ஆகும்
New Delhi:

சந்திராயன் -2 விண்கலம் நாளை அதிகாலை விண்ணில் ஏவப்பட உள்ளது. இதற்கான கவுன்ட்டவுன் இன்று காலை 6.51 மணிக்கு தொடங்கியது. உலக நாடுகளிலேயே முதல்முறையாக நிலவின் தென்துருவ பகுதிகளை ஆராயும் முயற்சியில் இந்தியா இறங்கி உள்ளது. இதற்காக சந்திராயன்-2 விண்கலத்தை இந்தியா உருவாக்கி வந்தது. இந்நிலையில் இறுதிகட்ட பணிகள் முடிந்த நிலையில் சந்திராயன் 2 விண்கலதை விண்ணில் ஏவ இந்தியா தயாராகி வருகிறது. நாளை அதிகாலை 2.51 மணியளவில் 3.8டன் எடைகளுடன் சந்திராயன்-2 விண்கலம், ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் இருந்து விண்ணில் ஏவப்பட உள்ளது. 

நிலவை சுற்றி வந்து ஆய்வு செய்வதற்காக ‘ஆர்பிட்டர்' என்ற சாதனம், நிலவில் தரை இறங்கி ஆய்வு செய்ய ‘லேண்டர்' என்ற சாதனம், நிலவின் தரையில் ஊர்ந்து சென்று ஆய்வு செய்ய ‘ரோவர்' என்ற சாதனம் என மொத்தம் 3 சாதனங்கள் இதில் இடம்பெற்றுள்ளன.

இந்த மூன்று சாதனங்களிலும் அதிநவீன கேமராக்கள், எக்ஸ்ரே கருவிகள், வெப்பநிலையை ஆய்வு செய்யும் கருவிகள், லேசர் தொழில்நுட்பத்தில் செயல்படும் கருவிகள் என 13 வகையான கருவிகள் இணைக்கப்பட்டுள்ளன.

இதற்கான கவுன்ட் டவுன் காலை 6.51 மணிக்கு தொடங்கியது. சந்திரயான்-2 விண்கலத்தை வெற்றிகரமாக விண்ணில் ஏவ ஜி.எஸ்.எல்.வி மார்க் 3 ராக்கெட் பயன்படுத்தப்படவுள்ளது. வெற்றிகரமான விண்ணில் ஏவப்பட்ட உடன், இரண்டு மாத பயணங்களுக்கும் பின் சந்திராயன் -2 நிலவின் தென் துருவப் பகுதியை அடையும்.

 3.84 லட்சம் கிலோமீட்டர் பயணம் செய்து நிலவை அடையப்போகிறது சந்திராயன் 2. இந்த சந்திராயன் 2 திட்டத்தை செயல்படுத்த 1000 கோடி ரூபாயை இந்தியா செலவழித்துள்ளது. இதுவரை எந்த விண்கலமும் கால் பதிக்காத இடத்தை சந்திராயன் - 2 தனது தடத்தை பதிக்க உள்ளதால் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

இஸ்ரோவின் தலைவரான் கே.சிவன் கடைசி 15 நிமிடங்கள் மிகவும் பதட்டமான நேரமாக இருக்கும் இதற்கும் முன் சிக்கலான தொழில்நுட்பம் கொண்ட விண்கலம் ஏவப்படவில்லை என்று கூறுகிறார்.

இந்த விண்கலம்  வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டால் விண்வெளி ஆய்வு மையமான இஸ்ரோவுக்கு மிகப்பெரிய சாதனையாக இருக்கும். இது அமெரிக்க விண்வெளி நிறுவனமான நாசாவைவிட கிட்டத்தட்ட 20 மடங்கு குறைவாக பட்ஜெட்டைக் கொண்டுள்ளது.


 

.