This Article is From Aug 02, 2019

நிலவை நோக்கிய பயணம்! 4-வது சுற்று வட்டப்பாதையை எட்டியது சந்திரயான் 2!!

கடந்த மாதம் 22-ம் தேதி ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து சந்திரயான் 2 விண்கலம் - பாகுபலி என அழைக்கப்பட்ட ஜி.எஸ்.எல்.வி. மார்க் 3 ராக்கெட் மூலம் நிலவை நோக்கி செலுத்தப்பட்டது.

நிலவை நோக்கிய பயணம்! 4-வது சுற்று வட்டப்பாதையை எட்டியது சந்திரயான் 2!!

இந்திய விண்வெளி ஆராய்ச்சியில் சந்திரயான் 2 முக்கிய மைல் கல்லாக பார்க்கப்படுகிறது.

Chennai:

நிலவை நோக்கிய தனது பயணத்தில் சந்திரயான் 2 விண்கலம் 4-வது சுற்று வட்டப்பாதையை சந்திரயான் 2 விண்கலம் எட்டியுள்ளது. இன்று மாலை சரியாக 3.27 மணிக்கு சந்திரயான் 4-வது சுற்றுப் பாதையில் நிலை நிறுத்தப்பட்டதாக இஸ்ரோ தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது. 

தற்போதுள்ள நிலையில் சந்திரயான் 2 புவியை குறைந்த பட்சம் 277 கிலோ மீட்டரும், அதிகபட்சம் 89,472 கிலோ மீட்டர் தொலைவிலும் நீள் வட்டப் பாதையில் சுற்றி வரும். 

நிலாவின் தென் துருவத்தை ஆய்வு செய்வதற்காக சந்திராயன் 2 செயற்கைகோள் கடந்த 22-ம்தேதி அனுப்பி வைக்கப்பட்டது. புறப்பட்ட 16-வது நிமிடத்தில் ராக்கெட்டில் இருந்து விண்கலம் பிரிந்து புவியை குறைந்த பட்சம் 170 கிலோ மீட்டர் தொலைவிலும், அதிகபட்சம் 45, 475 கிலோ மீட்டர் தொலைவிலும் நீள் வட்டப் பாதையில் சுற்றியது. 

இதன்பின்னர் அடுத்தடுத்து 2 முறை சந்திரயானின் சுற்றுப்பாதை உயர்த்தப்பட்டது. கடந்த 30-ம்தேதி 3-வது முறையாக சுற்று வட்டப்பாதை உயர்த்தப்பட்டது. இதையடுத்து 71, 792 கிலோ மீட்டர் நீள் வட்டப்பாதையில் சந்திரயான் செயற்கைகோள் புவியை சுற்றியது.

இந்த நிலையில் 4-ம் சுற்றுப் பாதைக்கு சந்திரயான் 2 உயர்த்தப்பட்டுள்ளது. 
எதிர்வரும் செப்டம்பர் 7-ம்தேதி சந்திரயான் நிலவில் இறங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

.