கோவாவில் நள்ளிரவில் மீண்டும் அரசியல் திருப்பம்! - பாஜகவின் பலம் அதிகரிப்பு

சபாநாயகர் மைக்கேல் லோபோ கூறும்போது, சபாநாயகர் பணியானது 24 மணி நேரமும் செயல்பட வேண்டியதாகும் என்று தெரிவித்துள்ளார்.

 Share
EMAIL
PRINT
COMMENTS

Goa: எம்ஜிபி கட்சியின் 3 உறுப்பினர்களில் 2 பேர் தங்களை பாஜகவில் இணைத்துவிட்டனர்.


New Delhi/Panaji: 

கோவா முதல்வராக இருந்த மனோகர் பாரிக்கர் மறைந்த நிலையில், அடுத்த முதல்வராக யார் தேர்வு செய்யப்படுவார் என்ற குழப்பம் ஏற்பட்டு வந்த நிலையில், பாஜகவின் தந்திரமான பேச்சுவார்த்தைகள் மூலம் கூட்டணி கட்சிகளின் ஒத்துழைப்புடன் கடந்த மார்ச்-20ஆம் தேதி அதிகாலை 2 மணி அளவில் புதிய முதல்வராக பிரமோத் சாவந்த் பதவியேற்றார்.

இந்த சம்பவம் நிகழ்ந்து முடிந்த ஒரு சில நாட்களிலே மீண்டும் நள்ளிரவில் ஒரு அரசியல் மாற்றம் நிகழ்ந்துள்ளது. 3 உறுப்பினர்களை கொண்ட மஹாராஷ்ட்ரவாதி கோமந்தக் கட்சி இரண்டாக உடைந்துள்ளது. இதில் இருந்து 2 உறுப்பினர்கள் கொண்ட அணி தற்போது தங்களை பாஜகவில் இணைந்துள்ளனர்.

இதைத்தொடர்ந்து, 36 உறுப்பினர்களை கொண்ட கோவா சட்டமன்றத்தில் பாஜகவிற்கு 12 உறுப்பினர்கள் இருந்த நிலையில், புதிதாக இரண்டு பேர் இணைந்துள்ளதால் பாஜகவின் பலம் 14 உறுப்பினர்களாக அதிகரித்துள்ளது.

பாஜக கூட்டணியில் இடம்பெற்றிருந்த மகாராஷ்டிரவாடி கோமந்தக் கட்சி (எம்ஜிபி) இரண்டாக உடைந்தது. அந்த கட்சியைச் சேர்ந்த 3 எம்எல்ஏக்களில் மனோகர் அஜாங்கர், தீபக் பவாஸ்கர் ஆகியோர் கட்சியில் இருந்து பிரிந்து புதிய அணியை உருவாக்கினர். பின்னர் அவர்கள் பாஜகவில் இணைந்தனர்.

இந்த இணைப்பு தொடர்பாக நள்ளிரவில் இருவரும் சபாநாயகர் மைக்கேல் லோபோவிடம் கடிதம் கொடுத்தனர். அந்த கடிதத்தில் மகாராஷ்டிரவாடி கோமந்தக் கட்சியின் மற்றொரு எம்எல்ஏவும் துணை முதல்வருமான சுதின் தவாலிகர் கையெழுத்திடவில்லை.

கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்களில் மூன்றில் இரண்டு பங்கு உறுப்பினர்கள் தனி அணியாகப் பிரிந்து, மற்றொரு கட்சியில் இணைந்தால் கட்சி தாவல் தடை சட்டத்தின்கீழ் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க முடியாது.

தற்போது 2 எம்எல்ஏக்கள் வருகையால் கோவா சட்டசபையில் பாஜக உறுப்பினர்களின் பலம் 14 ஆக உயர்ந்துள்ளது. காங்கிரசுக்கும் 14 எம்எல்ஏக்கள் உள்ளனர்.சமீபத்திய தமிழ்நாட்டுச் செய்திகள் சென்னை செய்திகள், அரசியல், வர்த்தகம், தொழில்நுட்பம், கிரிக்கெட் ஆகியவற்றின் தலைப்புச் செய்திகள் என ஒவ்வொரு நிகழ்வுகளையும் பற்றி தமிழில் படிக்க Facebook மற்றும் ட்விட்டர் Twitter ஐ பின் தொடருங்கள்.

NDTV Beeps - your daily newsletter

................................ Advertisement ................................

................................ Advertisement ................................

................................ Advertisement ................................