This Article is From Jul 03, 2020

பாகிஸ்தானில் நடந்த விபத்தில் 19 சீக்கிய பக்தர்கள் உயிரிழப்பு! பிரதமர் மோடி இரங்கல்

உயிரிழந்தவர்கள் அனைவரும் பெஷாவர் மாகாணத்தை சேர்ந்தவர்கள் என தகவல்கள் தெரிவிக்கின்றன. 29 சீக்கிய பக்தர்களை ஏற்றிக் கொண்டு பாகிஸ்தானின நங்கனா சாகிப்பில் இருந்து திரும்பிக் கொண்டிருந்தது.

பாகிஸ்தானில் நடந்த விபத்தில் 19 சீக்கிய பக்தர்கள் உயிரிழப்பு! பிரதமர் மோடி இரங்கல்

சம்பவம் தொடர்பாக விசாரிக்க குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.

ஹைலைட்ஸ்

  • பாகிஸ்தானில் மினி பஸ் மீது பயணிகள் ரயில் மோதி விபத்துக்குள்ளானது
  • சீக்கிய பக்தர்கள் 19 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்
  • சீக்கியர்கள் உயிரிழந்த சம்பவத்திற்குபிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்
Lahore:

பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் ஏற்பட்ட விபத்தில் சிக்கி 19 சீக்கிய பக்தர்கள் உயிரிழந்துள்ளனர். இந்த சம்பவத்திற்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.

பக்தர்கள் வந்த மினி பஸ், ரயில்வே கிராஸிங்கில் நின்றபோது பயணிகள் ரயில் வேகமாக மோதி விபத்து ஏற்பட்டது. இதில் 19 பேர் உயிரிழந்தார்கள். 

உயிரிழந்தவர்கள் அனைவரும் பெஷாவர் மாகாணத்தை சேர்ந்தவர்கள் என தகவல்கள் தெரிவிக்கின்றன. 29 சீக்கிய பக்தர்களை ஏற்றிக் கொண்டு பாகிஸ்தானின நங்கனா சாகிப்பில் இருந்து திரும்பிக் கொண்டிருந்தது.

அந்த நேரத்தில் உசைன் விரைவு ரயில் வண்டி கராச்சியில் இருந்து லாகூரை நேக்கி சென்றது. மதியம் சரியாக 1.30- இருக்கும் போது லெவல் கிராஸிங்கில் நின்ற மினி பஸ்ஸை, விரைவு ரயில் மோதித் தள்ளி விபத்தை ஏற்படுத்தியது. 

மினி பஸ்ஸில் இருந்தவர்கள் பரூக்காபாத்தில் உள்ள குருத்துவாரா சச்சா சவுதாவுக்கு சென்று கொண்டிருந்தனர். 

இந்த சம்பவத்திற்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள இரங்கல் பதிவில், பாகிஸ்தானில் சீக்கியர்கள் உயிரிழந்த சம்பவத்தை அறிந்து மன வேதனைப்பட்டேன். உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கும், நண்பர்களுக்கும் எனது இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். காயம் அடைந்தவர்கள் விரைவில் குணம் அடைய பிரார்த்திக்கிறேன். என்று கூறியுள்ளார். 

சம்பவம் நடந்த இடத்தில் மீட்பு பணிகள் நடைபெற்று முடிந்துள்ளன. இந்த விவகாரம் தொடர்பாக விசாரணைக்குழு அமைக்கப்பட்டுள்ளது. துயர சம்பவத்திற்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என பல்வேறு தரப்பினர் வலியுறுத்தியுள்ளனர். 
 

.