This Article is From Sep 12, 2018

கேரளா: 180 மருத்துவ மாணவர்களின் சேர்க்கை ரத்து – உச்ச நீதிமன்றம் உத்தரவால் அதிர்ச்சி

கேரளாவில் கண்ணூர் மற்றும் கருணா மருத்துவ கல்லூரிகளில் முறைகேடுகள் மூலமாக மாணவர்கள் சேர்க்கை நடத்தப்பட்டுள்ளது என்று குற்றச்சாட்டுகள் எழுந்தன

கேரளா: 180 மருத்துவ மாணவர்களின் சேர்க்கை ரத்து – உச்ச நீதிமன்றம் உத்தரவால் அதிர்ச்சி

புதுடெல்லி: கேரளாவில் 2 மருத்துவக் கல்லூரியில் படித்து வரும் 180 மாணவர்களின் சேர்க்கை தொடர்பான கேரள அரசின் உத்தரவை உச்ச நீதிமன்றம் நிராகரித்துள்ளது. இதனால் 180 மருத்துவ மாணவர்களின் சேர்க்கை ரத்தாகியுள்ளது.

கேரளாவில் கண்ணூர் மற்றும் கருணா மருத்துவ கல்லூரிகளில் முறைகேடுகள் மூலமாக மாணவர்கள் சேர்க்கை நடத்தப்பட்டுள்ளது என்று குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதையடுத்து கடந்த ஆண்டு மே மாதம் மாணவர் சேர்க்கையை ரத்து செய்து உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.

இதன்பின்னர் 7 மாதங்கள் கழித்து, கேரள அரசு அவசர சட்டம் ஒன்றை பிறப்பித்தது. இதையடுத்து சம்பந்தப்பட்ட கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை மீண்டும் தொடங்கப்பட்டது. இதன் தொடர்ச்சியாக கடந்த ஏப்ரல் மாதத்தின்போது, கேரள சட்டசபையில் தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டு அவசர சட்டத்திற்கு முழு சட்ட வடிவம் அளிக்கப்பட்டது.

இந்த நிலையில் கேரள அரசின் அவசர சட்டத்தை ரத்து செய்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதனால் சம்பந்தப்பட்டுள்ள 180 மருத்துவ மாணவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகியுள்ளது.

.