பீகாரில் மின்னல் தாக்கி ஒரே நாளில் 23 பேர் உயிரிழப்பு! பொது மக்கள் அதிர்ச்சி

அளவுக்கு அதிகமான வெயில் தாக்கம் கிழக்கு உத்தரப்பிரதேசம், பீகாரில் நிலவுவதாலும், வங்கக் கடலில் ஏற்பட்டுள்ள பெருங்காற்றாலும் பீகாரில் அசாதாரண வானிலை நிலவுவதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

பீகாரில் மின்னல் தாக்கி ஒரே நாளில் 23 பேர் உயிரிழப்பு! பொது மக்கள் அதிர்ச்சி

கடந்த ஒரே வாரத்தில் மட்டும் 100க்கும் அதிகமானோர் பீகாரில் மின்னல் தாக்கி உயிரிழந்தனர். 

Patna:

பீகாரில் இன்று ஒரே நாளில் மட்டும் 23 பேர் மின்னல் தாக்கி உயிரிழந்துள்ளனர். இந்த சம்பவம் பொது  மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படத்தியுள்ளது. போஜ்புர் உள்பட 5 மாவட்டங்களில் இந்த துயர சம்பவம் நடந்திருக்கிறது. 

நேற்றுதான் 5 மாவட்டங்களில் மின்னல் தாக்கி 8 பேர் உயிரிழந்திருந்தனர்.

இந்த நிலையில் இன்று போஜ்பூர், சரண், கைமூர்,  பாட்னா, பக்சார் ஆகிய மாவட்டங்களில் மின்னல் தாக்கி 23 பேர் பலியாகியுள்ளனர். 

உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ. 4 லட்சம் இழப்பீடாக வழங்கப்படும் என்று முதல்வர் நிதிஷ் குமார் அறிவித்துள்ளார்.  மேலும், மக்கள் யாரும் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார். 

Newsbeep

கடந்த ஒரே வாரத்தில் மட்டும் 100க்கும் அதிகமானோர் பீகாரில் மின்னல் தாக்கி உயிரிழந்தனர். 

அளவுக்கு அதிகமான வெயில் தாக்கம் கிழக்கு உத்தரப்பிரதேசம், பீகாரில் நிலவுவதாலும், வங்கக் கடலில் ஏற்பட்டுள்ள பெருங்காற்றாலும் பீகாரில் அசாதாரண வானிலை நிலவுவதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக மாநிலங்களுக்கு அறிவுறுத்தல்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக இந்திய வானிலை  ஆய்வு மையத்தின் இயக்குனர் மிருதுஞ்செய் மொகபத்ரா கூறியுள்ளார்.