This Article is From Apr 18, 2020

மும்பையில் கொரோனா தொற்றுக்கு உள்ளான 20 கடற்படை மாலுமிகள்!!

இதே போல, பிரெஞ்சு கடற்படையின் அணுசக்தியால் இயங்கும் விமானம் தாங்கி கப்பலான சார்லஸ் டி கோலேவில் கடற்படையினர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மும்பையில் கொரோனா தொற்றுக்கு உள்ளான 20 கடற்படை மாலுமிகள்!!

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த மாலுமிகள் ஐ.என்.எஸ் ஆங்கரின் குடியிருப்பு விடுதி வசதிகளில் தங்கியிருந்தனர்

Mumbai/New Delhi:

தேசிய அளவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களாக 13,835 பேர் அடையாளம் காணப்பட்டிருக்கக்கூடிய நிலையில், தற்போது மாகராஷ்டிரா மாநிலம் மும்பையில் உள்ள கடற்படை தளத்தில் 15 முதல் 20 மாலுமிகள் வரை கொரோனா தொற்றுக்கு பாதிக்கப்பட்டுள்ளதாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில் இவர்கள் தற்போது மும்பையில் உள்ள கடற்படை மருத்துவமனையான ஐ.என்.எச்.எஸ். அஸ்வினியில் தனிமைப்படுத்தலில் உள்ளனர். இந்தியக் கடற்படையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட முதல் கடற்படை வீரர் இவர்களாவார்கள். .இந்த மாலுமிகள் ஐ.என்.எஸ் ஆங்கரின் குடியிருப்பு விடுதி வசதிகளில் தங்கியிருந்தனர்.

02vkru18

ஐ.என்.எஸ் ஆங்ரே, மேற்கு கடற்படை கட்டளையின் கரையோர தளவாடங்கள் மற்றும் நிர்வாக ஆதரவு ஸ்தாபனமாகும். இந்த ஸ்தாபனம் கடற்படை பாராக்ஸ் என்றும் அழைக்கப்படுகிறது, மேலும் மும்பையை தளமாகக் கொண்ட அனைத்து கப்பல்களுக்கும் யூனிட்டுகளுக்கும் பல வசதிகளை வழங்குகிறது.   இந்த ஸ்தாபனத்தின் கட்டளை அதிகாரி COMBRAX (கமடோர் கடற்படை பாராக்ஸ்) என்றும் அழைக்கப்படுகிறார், அவர் தெற்கு மும்பையில் உள்ள கடற்படை சொத்துக்கள் மீது முழு அதிகார வரம்பைக் கொண்டிருக்கிறார்.  மேலும், தெற்கு மும்பையின் ஸ்டேஷன் கமாண்டரின் செயல்பாடுகளையும் செய்கிறார். ஐ.என்.எஸ் ஆங்க்ரே என்பது ஒரு தாய் கப்பல் போன்றது, இது பல்வேறு வகையான யூனிட்டுகள் மற்றும் வசதிகளின் செயல்பாட்டைக் கட்டுப்படுத்துகிறது மற்றும் மேற்பார்வை செய்கிறது.

மாலுமிகள் ஊரடங்கு நடவடிக்கையின் காரணமாக வெளியில் எங்கும் செல்லவில்லை. இதனால் அவர்களின் தொடர்பு கண்டறிதலில் சிரமம் ஏற்பட்டுள்ளது. எவ்வாறு இவர்கள் பாதிக்கப்பட்டார்கள் என்று கண்டறிவதற்கான முயற்சிகள் தற்போது தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

மகாராஷ்டிரா மாநிலத்தில் மட்டும் 3000க்கும் அதிகமானோர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளவர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர். தேசிய அளவில் மகாராஷ்டிரா மாநிலம் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மாநிலங்களில் முதல் இடத்தில் உள்ளது.

முன்னதாக ராணுவத்தில் கொரோனா தொற்றுக்கு 8 பேர் பாதிக்கப்பட்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தியாவில் கொரோனா தொற்றால் 452 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதே போல, பிரெஞ்சு கடற்படையின் அணுசக்தியால் இயங்கும் விமானம் தாங்கி கப்பலான சார்லஸ் டி கோலேவில் கடற்படையினர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

.