This Article is From Nov 27, 2018

நன்றியின் வெளிப்பாடு மட்டுமே; இது ஒன்றும் ரபேல் ஒப்பந்தம் அல்ல: நவ்ஜோத் சிங்

கர்தார்பூர் வழித்தடத்திற்கு அடிக்கல் நாட்டும் விழாவில் பங்கேற்க தயாரான நவ்ஜோத் சிங்கினால் அமிரிந்தர் சிங் வருத்தமடைந்துள்ளார்

நவ்ஜோத் சிங் சித்து ஆகஸ்ட் மாதம் பாகிஸ்தான் ராணுவ தலைவரை கட்டியணைத்து வரவேற்றார்.

ஹைலைட்ஸ்

  • பஞ்சாபில் ஒருவருக்கு வாழ்த்து தெரிவிக்க வரவேற்க கட்டியணைப்பது வழக்கமே.
  • பஞ்சாப் மக்கள் தங்களின் நன்றியினை வெளிப்படுத்த இதனை பயன்படுத்துகின்றனர்,
  • கர்தார்பூர் வழித்தட அடிக்கல் நாட்டும் நிகழ்ச்சியில் பங்கேற்க லாகூரில் உள்
Lahore:

கடந்த ஆகஸ்ட் மாதம் பாகிஸ்தான் பிரதமராக இம்ரான் கான் பதவியேற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நவ்ஜோத் சிங் சித்து அந்நாட்டின் ராணுவ தலைவரை கட்டியணைத்தார். இச்சம்பவம் இந்தியர்களிடையே பெரும் கோபத்தை ஏற்படுத்தியது.

நவ்ஜோத் சிங் இச்செயலை தவிர்த்திருக்கலாம் என்று பலர் கருத்து தெரிவித்தனர். இதுகுறித்து பேசிய நவ்ஜோத் சிங் சித்து, அதுவெறும் நன்றியின் வெளிப்பாடு மட்டுமே. இது ஒன்றும் ரபேல் ஒப்பந்தம் அல்ல என்று கூறினார், கிரிக்கெட் வீரராக இருந்து அரசியல் வாதியான நவ்ஜோத் சிங் சித்து கர்தார்பூர் வழித்தட அடிக்கல் நாட்டு விழாவிற்காக மீண்டும் பாகிஸ்தான் செல்கிறார்.

இமேஜ்: நவ்ஜோத் சிங் சித்து இன்று மதியம் வாகா எல்லையில் பாகிஸ்தான் அதிகாரிகளால் வரவேற்கப்பட்டார்.

கர்தார்பூர் வழித்தடத்தின் மூலம் இந்திய சீக்கிய யாத்ரீகர்கள் விசா இல்லாமல் குருத்துவாரவிற்கு செல்ல முடியும். இதுகுறித்து சித்து கூறுகையில், பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் இந்த காரிடர் திட்டத்தை தொடங்கியது சீக்கிய இனத்தினரிடம் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 

secaak

73 வருடமாக காத்திருந்த மக்களுக்கு தற்போதுதான் ஒரு முடிவு கிடைத்துள்ளது. மேலும், இம்ரான் கான் இத்திட்டத்திற்கான விதையை மூன்று மாதங்களுக்கு முன் விதைத்தார். தற்போது அது மரமாக வளர்ந்துள்ளதாக அவர் தெரிவித்தார்.

சீக்கிய குருவான குரு நானக், தற்போது பாகிஸ்தானின் ஒருபகுதியான நரோவால் மாவட்டத்தில் உள்ள கர்தார்பூரில் வாழ்ந்துள்ளார். எனவே கர்தார்பூரையும் குருதாஸ்பூரையும் இணைக்கும்படி மக்கள் பல நாட்களாக கோரிக்கை விடுத்து வந்தனர்.

மத்திய அரசு இதற்கான ஒப்பந்தத்தை கடந்த வாரம் உறுதி செய்தது. கர்தார்பூர் வழித்தடத்தை குருநானக்கின் 550வது பிறந்த நாளின் போது திறப்பதாக பாகிஸ்தான் வாக்குறுதி அளித்துள்ளது. நாளை கர்தார்பூர் வழித்தடத்திற்கான அடிக்கல்லினை இம்ரான் கான் நாட்டுகிறார்.

.