This Article is From Jul 21, 2019

அரசு எல்லா வழிகளிலும் உதவும்: துப்பாக்கி சூட்டில் பாதிக்கப்பட்டவர்களை சந்தித்த யோகி ஆதித்யநாத்

Sonbhadra shootout: விவசாயிகள் மீது துப்பாக்கி சூடு நடத்தியதில் 10 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 24பேர் காயமடைந்தனர்.

30 நிமிடங்களுக்கும் மேலாக பழங்குடியினர் மீது துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது. (File)

New Delhi:

உத்தர பிரதேச மாநிலம் சோன்பத்ரா மாவட்டத்தில் நிலத்தகராறில் சுட்டுக் கொல்லப்பட்ட பழங்குடியின விவசாயிகளின்  உறவினர்களை முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் சென்று சந்தித்துள்ளார். ‘எல்லா வகையிலும் அரசு உதவி செய்யும் ” என்று உறுதியளித்தார். ‘நிலத்தை கையகப்படுத்த முயற்சித்தவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்' என்றும் கூறினார்.

புதன்கிழமை கிராமத் தலைவரான யாக்யா தத் மற்றும் அவரது கூட்டாளிகள் தலைமுறை தலைமுறையாக பயிரிட்டு வந்த 36 ஏக்கர் நிலத்தை விட்டுக் கொடுக்க மறுத்த விவசாயிகள் மீது துப்பாக்கி சூடு நடத்தியதில் 10 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 24பேர் காயமடைந்தனர்.

யாக்யா தத் 32 டிராக்டர்களில் கிட்டத்தட்ட 200 பேரை அழைத்து வந்து நிலத்தை கைப்பற்ற வந்ததாக சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்தனர். 30 நிமிடங்களுக்கும் மேலாக பழங்குடியினர் மீது துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது.

“நிலத்தை திருட முயன்றவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். அரசாங்கம் எல்லா வகையிலும் உங்களுக்கு உதவும்” என்று முதல்வர் கூறினார். மேலும் தாக்குதலைத் தடுக்க புறக்காவல் காவல் நிலையம் அமைப்பதாகவும் தெரிவித்தார்.

 துப்பாக்கி சூட்டில் பலியானவர்களுக்கு பணத்தையும் நிலத்தையும் இழப்பீடாகக் கோரினார்கள். குற்றவாளிகளுக்கு மரண தண்டனை விதிக்கப்பட வேண்டும் என்று கோரிக்கை விடுத்ததாக ஏஎன்ஐ தெரிவித்துள்ளது.

துப்பாக்கி சூட்டில் இறந்தவர்களின் உறவினர்களுக்கு ரூ.10லட்சமும் மற்றும் 10 பிக்ஹா நிலமும் காயமடைந்தவர்களுக்கு ரூ. 7 லட்சமும் 6 பிக்ஹா நிலமும் கோருவோம் என்று துப்பாக்கி சூட்டில் காயமடைந்த சோட் லால் கூறினார்.

“கிராமத் தலைவருக்கு மரண தண்டனை கொடுக்க வேண்டும்” என்று துப்பாக்கி சூட்டில் காயமடைந்த இந்திர குமார் தெரிவித்தார்.

இந்த சம்பவம் மாநிலத்தில் பாஜக மீது அவதூறுகளை தூண்டியது. குற்றம் சாட்டப்பட்டவர்களை அரசு பாதுகாக்க முயற்சிப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டின. 

.