This Article is From Jan 22, 2020

உயிரை அச்சுறுத்தும் உஹான் வைரஸ் : சீனாவிலிருந்து வருவோரிடம் விமான நிலையத்தில் தீவிர சோதனை!!

Wuhan Virus : கரோனா வைரஸ் என்று அழைக்கப்படும் இந்த கிருமி உஹான் வைரஸ் என்று அறியப்படுகிறது. உயிரை அச்சுறுத்தும் இந்த வைரஸ் சீனாவில் தீவிரமாக பரவி வருகிறது. தென்கிழக்கு ஆசிய நாடுகளான தாய்லாந்து, ஜப்பான், தென் கொரியாவிலும் இந்த வைரஸ் பரவியுள்ளது.

உயிரை அச்சுறுத்தும் உஹான் வைரஸ் : சீனாவிலிருந்து வருவோரிடம் விமான நிலையத்தில் தீவிர சோதனை!!

மலேசியாவின் கோலாலம்பூர் விமான நிலையத்தில் வெப்பநிலைமானி மூலம் பயணிகள் சோதிக்கப்படுகின்றனர்.

New Delhi:

உயிரை அச்சுறுத்தும் உஹான் வைரஸ் சீனாவில் சுமார் 300 பேரை தாக்கியுள்ளது. இந்த வைரஸ் இந்தியாவுக்கு பரவக்கூடும் என்ற அச்சம் எழுந்துள்ள நிலையில் விமான நிலையத்தில் தீவிர சோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. நாட்டின் முக்கிய விமான நிலையங்களில், சீனாவில் இருந்து வரும் பயணிகளிடம் தீவிர சோதனையை அதிகாரிகள் மேற்கொள்ளத் தொடங்கியுள்ளனர். 

மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் பிறப்பித்த உத்தரவைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. உயிரைக் கொல்லும் இந்த வைரஸ் சீனாவின் உஹான் நகரில்தான் முதன் முதலில் உருவானது. அதன் அடிப்படையில் இது உஹான் வைரஸ் என்று அழைக்கப்படுகிறது. 

விமான நிலையத்தில் கவுன்டர்களில் வெப்பநிலையைக் காட்டும் தெர்மல் கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. அதன் மூலம் இந்த வைரஸ் பயணிகளுக்கு தாக்கப்பட்டுள்ளதா என்பது கண்டறியப்படும். 

உஹான் வைரஸ் தென்கிழக்கு ஆசிய நாடுகளான ஜப்பான், தென் கொரியா, தாய்லாந்துக்கும் பரவியிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மனிதர்களிடம் இருந்து மனிதர்களுக்கு இந்த வைரஸ் பரவுகிறது என்று சீன அரசு கூறியுள்ளது. 

.

இந்த உஹான் வைரஸ் சார்ஸ் வைரசுடன் தொடர்புடையது. இந்த சார்ஸ் வைரஸ்தான் கடந்த 2002 - 03-ல் சீனா மற்றும் ஹாங்காங்கில் பரவி சுமார் 650 பேரின் உயிரைப் பறித்தது. உலக சுகாதார நிறுவனம் அளித்துள்ள தகவலின்படி, இந்த வைரஸ் விலங்குகளிடம் இருந்து மனிதர்களுக்கு பரவியுள்ளது. 

குறிப்பாக உஹான் நகரில் இருக்கும் கடல் உணவு மார்க்கெட்தான் இந்த வைரசின் பிறப்பிடமாக கருதப்படுகிறது. 

இந்த விவகாரம் குறித்து கடல் உணவு வர்த்தகம் மற்றும் பயணம் தொடர்பாக உலக சுகாதார நிறுவனம் இதுவரை எந்த அறிவுறுத்தலையும் வெளியிடவில்லை. 

கடந்த வாரம், சீனாவுக்கு செல்லும் இந்தியர்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொண்டிருக்க வேண்டும் என்று மத்திய அரசு கேட்டுக் கொண்டிருந்தது. கடந்த டிசம்பர் 31-ம்தேதியில் இருந்து இந்திய விசாவுக்கு விண்ணப்பித்திருந்த சீன நாட்டவர்களின் விவரத்தை மத்திய சுகாதார அமைச்சகம் வெளியுறவு அமைச்சகத்திடம் இருந்து கேட்டுள்ளது. 

உஹான் வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை யாரும் சீனாவில் உயிரிழக்கவில்லை என்றும், அறிகுறியின் அடிப்படையில் வந்தவர்களில் 80 பேருக்கு வைரஸ் பாதிப்பு உள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் சீன அரசு தெரிவித்துள்ளது. 

இன்று சீனா வெளியிட்டுள்ள அறிக்கையின்படி அந்நாட்டில் 291 பேருக்கு உஹான் வைரஸ் பாதிப்பு அறிகுறிகள் உள்ளன. அவர்கள் உஹான் நகரை சேர்ந்தவர்களா அல்லது சீனாவின் மற்ற பகுதியை சேர்ந்தவர்களா என்பது தெரியவில்லை. 

பெய்ஜிங்கில் 5 பேருக்கும், குவாங் டாங்கில் 14 பேருக்கும், ஷாங்காயில் 2 பேருக்கும் உஹான் வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. 

(With Inputs From AFP, Reuters, PTI, ANI)

.