This Article is From Jun 06, 2018

பெல்ஜியத்தில் கொண்டாடப்படவுள்ள உலக யோகா தினம்

புகழ்பெற்ற இந்திய வயலின் இசைக்கலைஞர் அம்பி சுப்ரமணியம் உடன், பாரம்பரிய இசைக்குழுவின் நிகழ்ச்சி அரங்கேற்றப்பட உள்ளது

பெல்ஜியத்தில் கொண்டாடப்படவுள்ள உலக யோகா தினம்

ஹைலைட்ஸ்

  • பெல்ஜியத்தில் 4வது சர்வதேச யோகா தின நிகழ்ச்சிகள்
  • இந்தியா, பெல்ஜியம் மற்றும் ஐரோப்ப ஒன்றியம் இணைந்து நடத்துகிறது
  • ஜூன் 21 ஆம் தேதி ஐரோப்பிய பாராளுமன்றத்தில் நிகழ்கிறது
இந்தியா, பெல்ஜியம் மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் இணைந்து நடத்தும் 4வது சர்வதேச யோகா தின நிகழ்ச்சிகள், பெல்ஜியம் தலைநகர் மற்றும் நாட்டின் பிற பகுதிகளில் நடைப்பெற உள்ளது.

ஜூன் 21ம் தேதி ஐரோப்பிய பாராளுமன்றத்தில், நடைப்பெற உள்ள இந்தியாவை சேர்ந்த ஆன்மீக குரு ஶ்ரீஶ்ரீ ரவிசங்கர் வழிநடத்தும் சிறப்பு யோகா கருத்தரங்கத்தில் ஐரோப்பிய பாராளுமன்ற தலைவர் அண்டோனியோ டஜானி மற்றும் இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் ஆகியோர் பங்கேற்க உள்ளனர் என்று சிக்ஹுவா செய்து ஊடகம் தெரிவித்தது.

பெல்ஜியத்தில் உள்ள இந்திய தூதரகத்தில், உள் நாட்டு யோகா மையங்கள் மற்றும் நிறுவனர்களுடன் இணைந்து "பிரசல்ஸ் யோகா தினம்" ஜூன் 24 ஆம் தேதி போய்ஸ் டே லா காம்ப்ரேவில் நடைபெற உள்ளது

புகழ்பெற்ற இந்திய வயலின் இசைக்கலைஞர் அம்பி சுப்ரமணியம் உடன், பாரம்பரிய இசைக்குழுவின் நிகழ்ச்சி அரங்கேற்றப்பட உள்ளது.

ஆண்ட்வெர்ப், ல்யூவென், டர்பி, மான்ஸ் மற்றும் எங்கேயின் ஆகிய நகரங்களிலும், பெல்ஜியத்தின் பல பூங்காக்களிலும் பொது மக்களுக்காக, யோகா அமர்வுகள் நடக்கவுள்ளன.

2014ம் ஆண்டு, ஐநா சபையால் ஜூன் 21ம் தேதி உலக யோகா தினம் என அறிவிக்கப்பட்டது.

(इस खबर को एनडीटीवी टीम ने संपादित नहीं किया है. यह सिंडीकेट फीड से सीधे प्रकाशित की गई है।)
.