This Article is From Jun 21, 2018

2018 சர்வதேச யோகா தினத்தை, சுதர்சன் பட்நாயக்கின் மணல் கலை கொண்டடியது

சர்வதேச யோகா தினம்: சுதர்சன் பட்நாயக்கின் 20 அடி உயர மணல் சிற்பங்கள் பார்வையாளர்களை ஈர்த்தன.

2018 சர்வதேச யோகா தினத்தை, சுதர்சன் பட்நாயக்கின் மணல் கலை கொண்டடியது

ஹைலைட்ஸ்

  • சர்வதேச யோகா தினம்: 20 அடி உயர மணல் சிற்பங்கள் பார்வையார்களை கவர்ந்தது
  • இந்த மணல் சிற்பங்கள் அமைதியை பிரதிபலித்தது
  • இந்த சிற்பத்தை முடிக்க 5 டன் மணல் பயன்படுத்தப்பட்டது
New Delhi:
உலகம் முழுவதும் இன்று சர்வதேச யோகா தினத்தை கொண்டாடும் நிலையில்,புகழ்பெற்ற மணல் கலைஞர் சுதர்சன் பட்நாயக் இந்த முயற்சியை கௌரவிக்கும் வகையில் மணல் சிற்பத்தை உருவாக்கியுள்ளார்.இந்த வருட யோகா தினத்தின் தீம் 'அமைதிக்காக யோகா' (yoga for peace).இதை மனதில் கொண்டு மணல் சிற்பங்கள், “அமைதி மற்றும் இணக்கத்திற்கான யோகா” (Yoga for peace and harmony) என்ற செய்தியைக் தெரிவிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.20 அடி உயரம் கொண்ட இந்த சிற்பத்தில் ,பிரதமர் நரேந்திர மோதியுடன் உலகத் தலைவர்களான அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங்,ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின், மற்றும் வடக் கொரியாவின் தலைவர் சிம் ஜோங்- உன் இருக்கின்றனர்.
 
“நான் இதில் உலகத் தலைவர்களான அமெரிக்க ஜனாதிபதி , சீன ஜனாதிபதி, ரஷ்ய ஜனாதிபதி , வடக் கொரியாவின் தலைவர் சிம் ஜோங்- உன் மற்றும் மதிப்பிற்குரிய இந்திய பிரதமர் நரேந்திர மோதி அவர்கள் நாட்டு கொடிகளுடன் இருப்பதுப்போல் வடிவமைத்துள்ளேன்”என்று பத்ம ஸ்ரீ விருதுப் பெற்ற திரு. பட்நாயக் தனது ட்விட்டர் பக்கத்தில் எழுதியதோடு, அவரது ஈர்க்கக்கூடிய கலைபடைப்பின் புகைப்படத்தையும் 2 மணிநேரத்திற்கு முன்னர் பகிர்ந்துக் கொண்டார்.
 
இந்த சிற்பத்தை முடிக்க 5 டன் மணல் பயன்பட்ட நிலையில் , அவரது மணல் கலை நிறுவனத்தின் மாணவர்கள் இதில் வேலை செய்ய அவருடன் இனைந்துக் கொண்டனர் என ANI செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. ஒடிசாவின் பூரி கடற்கரையில் இந்த மணல் சிற்பம் உருவாக்கப்பட்டது.

உலக அமைதியை ஐக்கியப்படுத்தவும், வேலை செய்யவும் உலகத் தலைவர்களை நான் கேட்டுக்கொள்கிறேன்’ என சுதர்சன் பட்நாயக் தெரிவித்தார்.

ஆன்லைனில் பகிர்ந்து கொண்டவுடன், யோகா தினத்திற்கான இந்த மணல் சிற்பம் 700 லைக்குகள் மற்றும் 200 ரீட்விட்டுக்கு மேல் பெற்றுள்ளது.

ஐ.நா. பொதுச் சபை 2014 இல் பிரதமர் நரேந்திர மோதியால் முன்மொழியப்பட்டு, ஜீன் 21 அதிகாரப்பூர்வமாக ஐ.நா. மீலம் சர்வதேச யோகா தினமாக அறிவிக்கப்பட்டது. பின்னர் ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 21 அன்று உலகெங்கிலும் உள்ள மக்கள் பல்வேறு யோகா ஆசனங்கள் மற்றும் பிராணயாமங்களை பயிற்சி செய்ய ஒன்றாக கூடுகின்றனர்.Click for more trending news


.