This Article is From Oct 15, 2018

“பொய்யான புகார் அளிக்கப்பட்டுள்ளது; பதவி விலக மாட்டேன்” - எம்.ஜே. அக்பர் உறுதி

பாலியல் துன்புறுத்தல் புகாரில் சிக்கியுள்ள மத்திய அமைச்சர் எம்.ஜே. அக்பர் தன் மீது பொய்யான வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், தான் பதவி விலகப் போவதில்லை என்றும் கூறியுள்ளார்

#Me Too in India: எம்.ஜே. அக்பர் மீது 12-க்கும் அதிகமான பெண்கள் பாலியல் துன்புறுத்தல் புகார் அளித்துள்ளனர்

New Delhi:

பாலியல் துன்புறுத்தல் விவகாரத்தில் மத்திய வெளியுறவு இணையமைச்சர் எம்.ஜே. அக்பர் சிக்கியுள்ளார். அவர் பதவி விலக வேண்டும் என எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. அக்பர் மீதான புகார்கள் குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று மத்திய அமைச்சர்கள் சில வலியுறுத்தியுள்ளனர். இந்த நிலையில், தன்மீதான புகார்கள் குறித்து எம்.ஜே. அக்பர் இன்று விளக்கம் அளித்துள்ளார். இதுகுறித்து அவர் அளித்த பேட்டியில், பொய்யான புகார்கள் என்மீது அளிக்கப்பட்டுள்ளன. இதனை நான் சட்டப்படி எதிர்கொள்வேன் என்று கூறியுள்ளார்.

எம்.ஜே. அக்பர் விவகாரம் தொடர்பாக அறிய வேண்டிய தகவல்கள்

  1. இன்று பேட்டியளித்த அக்பர், “ என் மீதான புகார் குறித்து பொதுத் தேர்தலுக்கு முன்பே தெரிவித்திருக்கலாம். இப்போது புகார் தெரிவிக்க என்ன அவசியம்” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
  2. தி டெலிகிராஃப், தி ஏசியான் ஏஜ் போன்ற பிரபல இதழ்களில் ஆசிரியராக பொறுப்பு வகித்தவர் எம்.ஜே. அக்பர்.
  3. எம்.ஜே. அக்பர் தன்னுடன் பணியாற்றியவர்கள், புதிதாக பணிக்கு சேர்ந்த பெண்கள் உள்ளிட்டோருக்கு பாலியல் துன்புறுத்தல் அளித்ததாக புகார் முன்வைக்கப்பட்டுள்ளது.
  4. ஹோட்டல் அறைக்குள் வைத்து புதிதாக பணிக்கு சேரும் பெண்களை அவர் நேர்காணல் செய்ததாகவும், அவரது அலுவலக அறைக்குள் வைத்து பொருத்தமற்ற முறையில் நடந்து கொண்டதாகவும் அவர் மீது புகார் உள்ளது.
  5. பத்திரிகையாளர் பிரியா ரமணிதான் அக்பர் மீதான புகாரை முதன் முதலில் கடந்த 8-ம் தேதி ட்விட்டரில் தெரிவித்தார்.
  6. பிரியா ரமணிக்கு பின்னர் பிரேர்னா சிங் பிந்த்ரா, கஜாலா வஹாப், சுதாபா பால், அஞ்சு பாரதி, சுபர்னா சர்மா, சுமா ராஹா உள்ளிட்டோர் அக்பர் மீது புகார் தெரிவித்தனர்.
  7. காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகள் அக்பர் பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி வருகின்றன.
  8. டெல்லி மகளிர் ஆணையத்தின் தலைவர் சுவாதி மாலிவால் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார். அதில் எம்.ஜே. அக்பரின் அமைச்சர் பதவியை பறிக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
  9. வெளியுறவு அமைச்சரும், அக்பருக்கு சீனியருமான சுஷ்மா சுவராஜ் இந்த விவகாரம் தொடர்பாக எந்தவொரு கருத்தும் தெரிவிக்கவில்லை.
  10. மத்திய குழந்தைகள், பெண்கள் நலத்துறை அமைச்சர் மேனகா காந்தி அக்பர் மீதான புகார் குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்றும், மத்திய சமூக நலத்துறை அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே, குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டால் அக்பர் பதவி விலக வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளனர்.

.