This Article is From Dec 31, 2018

ப்ளாஷ் பேக் -டாப் 10 முக்கிய நிகழ்வுகள் 2018

Tamilnadu Top10: 2018-ம் ஆண்டில் தமிழ்நாட்டில் நிகழ்ந்த டாப்10 நிகழ்வுகளின் தொகுப்பை இங்கு பார்க்கலாம்

ப்ளாஷ் பேக் -டாப் 10 முக்கிய நிகழ்வுகள் 2018

தமிழக வரலாற்றில் 2018 -ம் ஆண்டு தடம் பதித்த  டாப் 10 நிகழ்வுகளை தொகுத்து தருகிறது NDTVதமிழ்

தூத்துக்குடி துப்பாக்கி சூடு

ஆளும் அரசிற்கு மக்கள் மீதுள்ள ‘அன்பை' இந்நிகழ்வு எடுத்துக் காட்டியது.

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி நடந்த போராட்டத்தின் 100வது நாளில் போராட்டக்காரர்களின் மீது தமிழக காவல்துறை துப்பாக்கிச் சூடு நடத்தியது. இதில் 13 உயிரிழந்தனர். பலரும் படுகாயமடைந்தனர். மனித நேயமற்ற இந்தச் செயல் மக்கள் மத்தியில் கடும் அதிர்ப்தி அலைகளை உருவாக்கியது. ‘போராடினா சுடுவாங்க' என்பது தான் மக்களின் பேச்சாக இருந்தது. உயிரிழப்புக்குப்பின் ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டாலும் அதன்பின் பசுமைத் தீர்ப்பாயம் அதைத் திறக்க அனுமதியளித்துள்ளது.

 

04k56lbo

எட்டுவழிச்சாலை

சேலத்திலிருந்து சென்னை வரையான எட்டு வழிச்சாலையை அமைக்க அதற்கான நிலத்தை கையகப்படுத்த ஆளும் அதிமுக அரசு பல வகையிலும் முயற்சிகளை மேற்கொண்டு வந்தது. பொதுமக்களை அச்சுறுத்தியும் காவல்துறையினரைக் கொண்டு மிரட்டியும் நிலம் கையகப்படுத்த அரசு முயற்சித்தது. பாதிக்கப்பட்டவர்கள் நீதிமன்றத்தை அணுகினர். சென்னை உயர்நீதிமன்றம் மறு உத்தரவு வரும் வரை நிலம் கையகப்படுத்துதல் உள்ளிட்ட அனைத்து பணிகளுக்கும் தடை விதித்தது.

99o7f668

கலைஞர் கருணாநிதி மரணம்

சமூகநீதி என்ற லட்சியவாதத்தின் முகமாக இருந்த கலைஞர் கருணாநிதி மறைந்தார். இறந்த பின்னும் தனக்கான இடத்திற்கான நீதிமன்றத்தில் போராடி அதை வென்றெடுத்த சென்றடைந்தார். இளைஞர்கள் முதல் முதியவர்கள் வரை பலரும் அவரின் இறுதி அஞ்சலிக்கூட்டத்தில் கலந்து கொள்ளவேண்டுமென சென்னை நோக்கி படையெடுத்தனர்.

 

9rdoveig

ஆணவக்கொலை

21 நூற்றாண்டிலும் மறையாத சாதி. இதற்கு உதாரணம் தெலுங்கானாவில் அம்ருதா, பிரனாய் காதல் தம்பதியினரை அம்ருதாவின் அப்பா கூலிப்படை வைத்து பிரனாயை அம்ருதாவின் கண்முன்னே வெட்டி கொன்றார். இது மட்டுமல்ல ஒசூரைச் சேர்ந்த நந்திஸ்- சுவாதி என்ற காதல் தம்பதியினரை சுவாதியின் பெற்றோரை இருவரையும் சித்தரவதை செய்து உடலை எரித்து காவிரி ஆற்றில் தூக்கி எறிந்த சம்பவங்களும் நடந்தேறின.

 

8a065koo

நீட் தேர்வு

மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வு குறித்த பிரச்சனைகள் இந்த ஆண்டு தொடர்ந்தன. தமிழக மாணவர்களுக்கு நீட் தேர்வுக்கான தேர்வு மையங்கள் வெவ்வேறு மாநிலங்களில் ஒதுக்கப்பட்டன. இதனால் தமிழக மாணவர்கள் பலரும் அதிர்ப்தியடைந்தனர். கேரளாவில் நீட் தேர்வு எழுதச் சென்ற மாணவன் மகாலிங்கத்தின் அப்பா கிருஷ்ணசாமி தேர்வறைக்கு வெளியே மரணமடைந்தார். தேர்வு எழுதி முடித்து வந்த மாணவன் ‘அப்பா எங்கே' என்ற கேள்வி தமிழ்நாட்டையே உலுக்கியது.

 

hq3bged8

காவிரிப் பிரச்னை

காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டாலும், கர்நாடாக தேர்தலை காரணம் காட்டி பேட்ட இழுபறியில் விட்ட நிலையில் தமிழக மக்களின் போராட்டத்திற்கு பின் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்பட்டது. உச்ச நீதிமன்ற தீர்ப்பை ஒருபோது மதிக்காத கர்நாடக அரசு தற்போது மேகதாதுவில் அணைகட்ட முடிவெடுத்து அனுமதி வாங்கியுள்ளது.

 

btcl08ro

நிர்மலா தேவி -ஆளுநர் விவகாரம்

அருப்புக்கோட்டை கல்லூரியைச் சேர்ந்த பேராசிரியர் நிர்மலாதேவி மாணவிகளை பாலியல் பேரம் பேசியது தமிழகத்தில் பெரும் அதிர்ச்சியலைகளை உருவாக்கியது. நிர்மலா தேவி தன் மாணவிகளிடம் பேசிய ஆடியோ இணையத்தில் பகிரப்பட்டது. ஆடியோவில் மதுரை பல்கலைக்கழக பேராசிரியர்கள் முதல் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் பெயர் வரை அதில் அடிபட சிபிசிஐடி சிறப்புக் குழு விசாரிக்கத் தொடங்கியது.

 

k14834v

கமல்- டிடிவி தினகரன் கட்சி தொடக்கம்

ரஜினி அரசியல் பிரவேசத்தை அறிவித்திருந்தார், அவரிடம் கொள்கை பற்றி கேட்டதும் அவருக்கு ‘தலை சுத்தத் தொடங்கி விட்டது'. அரசியல் பிரவேசம் குறித்து கமல் அறிவித்து, பிப்ரவரி மாதம் ‘மக்கள் நீதி மய்யம்' என்று தன் கட்சியை அறிவித்தார். உங்கள் கட்சியின் கொள்கை என்ன என்ற கேள்விக்கு ‘விரைவில் அதை அச்சடித்து கொடுப்போம்' என்று கூறி தன் கொள்கையை ‘தெளிவாக' வெளிப்படுத்தினார். அதிமுகவை காப்பாற்றவே அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் என்று தன் கொள்கையை அறிவித்து தொடங்கினார் டிடிவி தினகரன். நூதன கொள்கைகளைக் கேட்டு திக்குமுக்காடியது தமிழகம்.

 

m5g2uhsg

மிடூ (#metoo)

உலகமெங்கும் பாலியல் தொல்லையால் பாதிக்கப்பட்ட பெண்கள் ‘நானும்தான்' என்ற அடிப்படையில் தனக்கு நேர்ந்த பாலியல் தொல்லைகளை பொதுவெளியில் பகிர்ந்து, மிகப்பெரும் அடையாளத்துடன் இருந்த ஆண்களின் முகத்திரையை கிழித்தனர். இந்த அலை இந்தியாவிலும் அடிக்கத் தொடங்கியது. இதில் பாடகி சின்மயி பாடலாசிரியர் வைரமுத்து மீது தன் குற்றச்சாட்ட வைத்தார். அதன்பின் கவிஞர் லீனா மணிமேகலை இயக்குநர் சுசிகணேசன் மீது பாலியல் குற்றச்சாட்டை வைத்தார். இதை அமலாபால் ஆதரித்து தன்னிடமும் அப்படி நடக்க முற்பட்டதாக அறிக்கை வெளியிட்டு பகிரங்க ஆதரவை தெரிவித்தார். பொதுச் சமூகத்தின் பேச்சுக்கு பயந்து ஒடுங்கிய பெண்கள் தங்களுக்கு நேர்ந்ததை சத்தமிட்டு பேசத் தொடங்கினார்கள். மிடூ விவகாரத்தில் சேலம் மாவட்டம் தளவாய்ப்பட்டியைச் சேர்ந்த ராஜலட்சுமி என்ற சிறுமி தன்னிடம் தவறாக நடந்து கொண்டவனை வீட்டில் சொன்னதற்காக தலை வெட்டி கொல்லப்பட்டாள்.

 

me434jtg

கஜா புயல்

25 ஆண்டுகளாக கனவு ஒரு தலைமுறையின் உழைப்பு என டெல்டா மாவட்ட மக்களின் வாழ்வாதாரத்தை முற்றிலுமாக துடைத்தெறிந்தது கஜா புயல். ஒரே இரவில் தங்களின் ஒட்டுமொத்த வாழ்க்கையையும் இழந்து மக்கள் இன்று வரை வாடுவதை பார்க்க முடிகிறது. நிவாரண முகாமுக்கு கொடுத்த புழு பிடித்த அரிசி, சொற்பமான பண உதவி போன்ற காரணங்கள் மக்களுக்கு அரசின் மீதான கோபத்தை அதிகப்படுத்தியது.

 

9j7i7n4o
.