This Article is From May 21, 2019

இந்த அமெரிக்க ஓட்டல் உரிமையாளர் எதற்கு இலவசமாக உணவளிக்கிறார்..?- தெரிந்துகொள்ளுங்கள்

வெள்ளை மாளிகைக்கு அருகில்தான் ‘சாகினா ஹலால் கிரில்’ உணவகம் அமைந்துள்ளது

இந்த அமெரிக்க ஓட்டல் உரிமையாளர் எதற்கு இலவசமாக உணவளிக்கிறார்..?- தெரிந்துகொள்ளுங்கள்

கடந்த 5 ஆண்டில் மட்டும், இந்த உணவகம் சுமார் 80,000 பேருக்கு இலவச உணவு வழங்கியுள்ளது என்று ‘நவ் திஸ்’ தகவல் தெரிவிக்கிறது. 

அமெரிக்காவின் வாஷிங்கடன் டிசி-யில்தான் வெள்ளை மாளிகை உள்ளது. அந்த வெள்ளை மாளிகைக்கு அருகில்தான் ‘சாகினா ஹலால் கிரில்' உணவகம் அமைந்துள்ளது. பார்த்தால், மற்ற உணவகங்கள் போல பளபளவெனத்தான் இதுவும் தெரியும். ஆனால், மற்றவைகளுக்கும் இந்த உணவகத்துக்கும் இருக்கும் ஒரு முக்கிய வித்தியாசம், யாருக்குப் பசி என்றாலும் விரைந்து உணவளிக்கும் சாகினா ஹலால் கிரில். கடந்த 5 ஆண்டில் மட்டும், இந்த உணவகம் சுமார் 80,000 பேருக்கு இலவச உணவு வழங்கியுள்ளது என்று ‘நவ் திஸ்' தகவல் தெரிவிக்கிறது. 

“யாராவது, தனக்கு சாப்பிட ஏதாவது வேண்டும் என்று கேட்டார்கள் என்றால், அவர்களுக்கு இங்கு அது கொடுக்கப்படும்” என்று இன்முகத்துடன் சொல்கிறார் உணவக உரிமையாளர் காஸி மன்னான். 2013 ஆம் ஆண்டு, சாகினா ஹலால் கிரில் தொடங்கப்பட்டதில் இருந்து இந்த கொள்கை மட்டும் மாறவில்லை. 

“உங்களால் காசு கொடுத்து சாப்பிட முடியாது என்றால், எங்கள் உணவகத்துக்கு வந்து சாப்பிட்டுக் கொள்ளலாம். காசு கொடுத்து சாப்பிடுபவர்களுடன் சேர்ந்து நீங்களும் உணவை சுவைக்கலாம்” என்கிறார் காஸி.

தனது குழந்தைப் பருவத்தில் பட்ட கஷ்டம்தான், இந்த முடிவுக்குக் காரணம் என்று காஸி சொல்கிறார். பாகிஸ்தானில் இருக்கும் ஒரு குக்கிராமத்தில் வளர்ந்த காஸி, உணவில்லாமல் வறுமையில் தவித்து வந்துள்ளார். 

“வீடு வசதியற்ற பலர், குப்பைத் தொட்டிகளில் உணவு ஏதேனும் கிடைக்குமா என்று தேடுவதை நான் பார்த்திருக்கிறேன். அதைப் பார்த்த அடுத்த கணம், எனது சொந்த கதை நியாபகம் வரும்” என்று தனது கஷ்டமான கடந்த காலத்தை நினைவுகூறுகிறார். 

காஸியின் தற்போதைய ஒரே இலக்கு, ஆண்டுக்கு 16,000 பேருக்கு இலவச உணவு அளிக்க வேண்டும் என்பதுதான்.


 

Click for more trending news


.