This Article is From Dec 08, 2018

‘எதற்காக இந்தியாவில் இருக்க வேண்டும்?’- மேகதாது விவகாரத்தில் வைகோ கேள்வி

காவிரி ஆற்றின் குறுக்கே, மேகதாதுவில் கர்நாடக அரசு அணைக் கட்ட நடவடிக்கை எடுத்து வருகிறது

‘எதற்காக இந்தியாவில் இருக்க வேண்டும்?’- மேகதாது விவகாரத்தில் வைகோ கேள்வி

காவிரி ஆற்றின் குறுக்கே, மேகதாதுவில் கர்நாடக அரசு அணைக் கட்ட நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்த நடவடிக்கைக்கு தமிழக அரசும், எதிர்கட்சிகளும் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இது தொடர்பாக சில நாட்களுக்கு முன்னர் தமிழக சட்டப்பேரவைக் கூட்டப்பட்டு, தனித் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இப்படிப்பட்ட சூழலில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, ‘மேகதாதுவில் அணை கட்டினால், இந்திய ஒருமைப்பாடு என்கின்ற அணை உடையும்' என்று கூறியுள்ளார்.

இது குறித்து செய்தியாளர்கள் சந்திப்பில் வைகோ மேலும் கூறுகையில், ‘பல்லாயிரம் ஆண்டுகளாக நாங்கள் பெற்று வந்த காவிரித் தண்ணீரை, கர்நாடகம் தடுத்த நிறுத்துகிறது. அதற்கு மத்திய அரசு துணை போகிறது. இதே போன்றுதான், முல்லைப் பெரியாற்றில் அணைக் கட்டுவதற்கு மத்திய அரசு அனுமதி கொடுத்தது. கேரளா ஆங்கிருந்து தண்ணீர் கொடுக்க மறுக்கிறது. பாலாற்றில், தடுப்பணைகள் கட்டிய ஆந்திர அரசு, தண்ணீர் கொடுக்க மறுத்து வருகிறது.

எதற்காக இந்தியாவில் இருக்க வேண்டும். தனியாக தமிழ்நாடு இருந்தால், ஐநா சபையில் முறையிட்டு நீதி கேட்கலாம் என்ற எண்ணம் எதிர்காலத்தில் ஏற்படுவதைத் தடுக்க முடியாது. மேகதாதுவில் அணை கட்டினால், இந்திய ஒருமைப்பாடு என்கின்ற அணை உடைந்துபோகும்' என்று கருத்து தெரிவித்துள்ளார்.

.