இருசக்கர வாகனத்தில் பின்னால் அமர்ந்து செல்வோர் தலைகவசம் அணிவதையும், காரின் மற்ற பயணிகள் சீட் பெல்ட் அணிய ஏன் கட்டாயப்படுத்தவில்லை என காவல் துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. இது குறித்து என்ன செயல் திட்டங்கள் நடைமுறையில் உள்ளன என்பது பற்றி அறிக்கை தாக்கல் செய்யுமாறு, நீதிமன்றம் காவல் துறைக்கு உத்தரவிட்டுள்ளது.
இரு சக்கர வாகனத்தை ஓட்டுபவரும், பின்னால் உட்கார்ந்து பயணிப்போரையும் ஹெல்மெட் அணிவதை கட்டாயப்படுத்துகிறது மோட்டார் வாகனச் சட்டம். அதை தமிழகத்தில் அமல்படுத்த காவல் துறைக்கு உத்தரவிடுமாறு, தாக்கல் செய்யப்பட்ட மனுவுக்கு தான் நீதிமன்றம் இவ்வாறு கேள்வி எழுப்பியுள்ளது.
“பின்னால் உட்கார்ந்து இரு சக்கர வாகனத்தில் பயணிப்போரும் ஹெல்மட் அணிவது மோட்டார் வாகன சட்டத்தின் படி கட்டாயம். ஆனால் இதுவரை, அப்படி யாரும் ஹெல்மட் அணிந்து நாங்கள் பார்த்ததே இல்லை” என்றது நீதிமன்றம்.
போக்குவரத்து ஆணையரின் தகவல் படி, தமிழகத்தில் நடக்கும் விபத்துகளி பலியானது, அதிகமாக ஓட்டுநரின் தவறு மற்றும் ஹெல்மெட் அணியாததே காரணம் என மனு தாக்கல் செய்த ராஜேந்திரன் பதிவு செய்தார். அதுவும் இருசக்கர வாகனங்கள் தான் அதிகம் விபத்தில் சிக்குவதாகவும், ஹெல்மெட் அணியாததே பலி எண்ணிக்கை அதிகரிப்பதற்கான காரணம் என்றும் அவர் கூறினார். மேலும், காரின் மற்ற பயணிகள் சீட் பெல்ட் அணிவதையும் மோட்டார் வாகன சட்டம் கட்டாயப்படுத்துவதாகவும் மனு தாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
(இந்த செய்தி NDTV ஊழியரால் எடிட் செய்யப்படவில்லை. சிண்டிகேட்டெட் ஃபீட் மூலம் தானாக உருவாக்கப்பட்டது.)