This Article is From Dec 04, 2018

''கஜா புயல் பாதிப்பை பார்வையிட மோடி ஏன் இன்னும் வரவில்லை?"- மு.க.ஸ்டாலின் கேள்வி

திருச்சியில் நடைபெற்ற அனைத்துக் கட்சி மாநாட்டில் பங்கேற்ற திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மத்திய மாநில அரசுகளை விமர்சித்து பேசினார்.

''கஜா புயல் பாதிப்பை பார்வையிட மோடி ஏன் இன்னும் வரவில்லை?

கஜா புயல் பாதிப்பை பார்வையிட பிரதமர் மோடி இன்னும் ஏன் தமிழ்நாட்டிற்கு வரவில்லை என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.

கர்நாடகத்தில் காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாட்டுவில் அணை கட்டும் முயற்சியில் மாநில அரசு ஈடுபட்டு வருகிறது. இதற்கான சாத்தியக் கூறுகள் குறித்து ஆய்வு செய்ய கர்நாடக அரசு மத்திய அரசிடம் அனுமதி கேட்டிருந்தது.

அதற்கு தற்போது அனுமதி அளிக்கப்பட்டுள்ள நிலையில், சாத்தியக் கூறுகளை ஆய்வு செய்யும் பணிகளை கர்நாடகா முழு வீச்சில் செய்து வருகிறது. மேகதாட்டுவில் அணை கட்டப்பட்டால் காவிரி ஆறு தமிழ்நாட்டிற்கு வந்து சேர்வதில் சிக்கல் ஏற்படும்.

இந்த நிலையில் மேகதாட்டு அணை விவகாரத்தை எதிர்கொள்வதற்காக திமுக தலைமையில் கடந்த சில நாட்களுக்கு முன்பாக அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெற்றது. இதன் தொடர்ச்சியாக திருச்சியில் அனைத்துக் கட்சியினர் பங்கேற்ற கண்டன ஆர்ப்பாட்டம் இன்று காலை நடந்தது. இதில் திமுக தலைவர் ஸ்டாலின் பேசியதாவது-

கஜா புயலால் கடுமையான பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதிலிருந்து மக்களை மீட்டெடுக்க இன்னும் 20 ஆண்டுகள் ஆகும். இப்படியொரு பாதிப்பு வெளி மாநிலங்களில் ஏற்பட்டிருந்தால் அங்கு மோடி பறந்து சென்றிருப்பாரா அல்லது சென்றிருக்க மாட்டாரா?.

ஏன் புயல் பாதிப்பு பகுதிகளை பார்வையிட மோடி இன்னும் தமிழ்நாட்டிற்கு வரவில்லை? நீங்கள் கேட்கலாம்; மோடிதான் இந்தியாவிலேயே இல்லையே. அவர் எப்படி தமிழ்நாட்டிற்கு வருவார் என்று நீங்கள் கூட ஒரு கேள்வியை கேட்கலாம். ஆக அப்படிப்பட்ட நிலையில் ஒரு பிரதமர்.

வேறு மாநிலமாக இருந்திருந்தால் ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் நிவாரண தொகையாக வழங்கப்பட்டிருக்கும். இவ்வாறு மோடி பேசினார்.
 

.