This Article is From Nov 05, 2019

மாட்டிறைச்சியை சாப்பிடும் அறிவுஜீவிகள் நாய்க்கறியையும் சாப்பிடுங்கள் : பாஜக தலைவரின் சர்ச்சை பேச்சு

இந்தியாவின் புனித மண்ணில் மாடுகளை கொல்வதும் மாட்டிறைச்சி சாப்பிடுவதும் ஒரு குற்றம்” என்று திலீப் கோஷ் பேசியதாக ஏ.என்.ஐ தெரிவித்துள்ளது. சாலைகளில் மாட்டிறைச்சி சாப்பிடும் அறிவுஜீவிகளைத் தாக்கி பேசினார்.

மாட்டிறைச்சியை சாப்பிடும் அறிவுஜீவிகள் நாய்க்கறியையும் சாப்பிடுங்கள் : பாஜக தலைவரின் சர்ச்சை பேச்சு

“இந்திய நாட்டு மாடுகள் மட்டுமே எங்கள் தாய் வெளி நாட்டு மாடுகள் அல்ல” என்றும் தெரிவித்தார்.

Burdwan:

மேற்கு வங்கத்தில் பாஜகவின் உயர்மட்ட தலைவர் திலீப் கோஷ் “மாட்டிறைச்சி சாப்பிடும் அறிவுஜீவிகள் நாய் கறியையும் சாப்பிட வேண்டும். அவர்களின் ஆரோக்கியத்திற்கு இரண்டும் ஒன்றுதான்” என்று பொது கூட்டம் ஒன்றில் பேசியுள்ளார். மேலும் அவர் இந்தியாவின் தங்கம் ‘பசும் பால்' தான் என்றும் அதில் தங்கம் உள்ளது என்றும் கூறினார். 

“மாடு எங்கள் தாய், நாங்கள் மாட்டுப் பாலை குடிப்பதால்தான் உயிருடன் இருக்கிறோம். எனவே யாராவது என் அம்மாவிடம் தவறாக நடந்து கொண்டால், அவர்கள் நடத்தப்படவேண்டிய விதத்தில் நடத்துவேன்.

 இந்தியாவின் புனித மண்ணில் மாடுகளை கொல்வதும் மாட்டிறைச்சி சாப்பிடுவதும் ஒரு குற்றம்” என்று திலீப் கோஷ் பேசியதாக ஏ.என்.ஐ தெரிவித்துள்ளது. சாலைகளில் மாட்டிறைச்சி சாப்பிடும் அறிவுஜீவிகளைத் தாக்கி பேசினார். “வெளிநாட்டு செல்ல நாய்களின் மலத்தை சுத்தம் செய்வதில் பெருமை கொள்கிறார்கள் “என்றும் தெரிவித்தார். 

“சில அறிவுஜீவிகள் சாலைகளில் மாட்டிறைச்சி சாப்பிடுகிறார்கள். நான் அவர்களிடம் சொல்கிறேன் ஏன் மாட்டுக் கறி மட்டும் சாப்பிடுகிறீர்கள், நாய் இறைச்சியையும் சாப்பிடுங்கள். எந்த மிருகத்தை சாப்பிட்டாலும் உடல் நிலை நன்றாக இருக்கிறது தானே. ஆனால் சாலைகளில் ஏன்? உங்கள் வீட்டிற்குள் சாப்பிடுங்கள்" என்று பாஜகவின் திலீப் கோஷ் தெரிவித்தார். 

கொல்கத்தாவிலிருந்து 100 கி.மீ தொலைவில் உள்ள பர்த்வானில் “கோபா அஷ்டமி காரியக்ரம்”நிகழ்ச்சியில் பேசினார். “இந்திய நாட்டு மாடுகள் மட்டுமே எங்கள் தாய் வெளி நாட்டு மாடுகள் அல்ல” என்றும் தெரிவித்தார். திலீப் கோஷ் சர்ச்சை பேச்சிற்கு மிகவும் புகழ்பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. 

.