This Article is From Jul 25, 2020

செஃல்பி மோகத்தில் ஆற்றின் நடுவே சிக்கிக்கொண்ட 2 சிறுமிகள்! வீடியோ

பின்னர் திரும்பி வர முற்பட்டபோது ஆற்றின் நீரோட்டம் மிகவும் அதிகரித்துள்ளது. இதனால் அச்சமடைந்த இரண்டு மாணவிகளும் செய்வதறியாது தவித்து வந்துள்ளனர்.

செஃல்பி மோகத்தில் ஆற்றின் நடுவே சிக்கிக்கொண்ட 2 சிறுமிகள்! வீடியோ

செஃல்பி மோகத்தில் ஆற்றின் நடுவே சிக்கிக்கொண்ட 2 சிறுமிகள்! வீடியோ

மத்திய பிரதேசத்தில் செஃல்பி எடுக்கும் மோகத்தில் ஆற்றின் நடுவே சென்று 2 சிறுமிகள் சிக்கித்தவித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. 

சிந்த்வாரா மாவட்டத்தில் உள்ள பெல்கடி கிராமத்திற்கு சுற்றுலாவுக்காக 6 மாணவிகள் சென்றுள்ளனர். அங்குள்ள பெஞ்ச் நதிக்கரைக்கு சென்ற மாணவிகள் ஆற்றோரத்தில் உற்சாகமாக விளையாடி வந்துள்ளனர். அப்போது அதில் இரண்டு சிறுமிகள் மட்டும் செல்ஃபி எடுப்பதற்காக நீரோட்டம் நிறைந்த ஆற்றின் நடுவே உள்ள பாறைக்கு சென்றுள்ளனர். 

பின்னர் திரும்பி வர முற்பட்டபோது ஆற்றின் நீரோட்டம் மிகவும் அதிகரித்துள்ளது. இதனால் அச்சமடைந்த இரண்டு மாணவிகளும் செய்வதறியாது தவித்து வந்துள்ளனர். 

இதைத்தொடர்ந்து, உடனிருந்த மாணவிகள் பதறியடித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். 

இந்த சம்பவம் தொடர்பான வீடியோவில், அச்ச உணர்வுடன் 2 மாணவிகளும், பாறையில் நிற்கின்றனர். அவர்களை எப்படி மீட்பது என்பது குறித்து போலீசார் ஒருபக்கம் விவதாதித்து வருகின்றனர். 

இதன்பின்னர், 12 பேர் கொண்ட போலீஸ் குழுவினர், மாவட்ட நிர்வாகத்தினர் மற்றும் உள்ளூர் மக்கள் உள்ளிட்டோர் இணைந்து பெரும் போராட்டத்திற்கு பின்னர் சிறுமிகளை மீட்டுள்ளனர். 

உலகளவில் இளைஞர்கள் பலர் இணையத்தில் பிரபலமாக வேண்டும் என்பதற்காக, இதுபோன்ற ஆபாத்தான கட்டத்தில் செஃல்பி எடுக்க முயற்சித்து உயிரிழந்து வருகின்றனர். 

.