பார்க்கவே பாவமா இருக்கு... பறித்த பணத்தை திருப்பிக் கொடுத்த திருடன் : வீடியோ

பேங்கில் ஜீரோ பேலன்ஸ் இருப்பதை பார்த்து சிரித்துக் கொண்டே பணத்தை கொடுத்து விட்டு சென்று விடுகிறான்.

பார்க்கவே பாவமா இருக்கு... பறித்த பணத்தை திருப்பிக் கொடுத்த திருடன் : வீடியோ

இன்றைய நாள் இணைய உலகில் மக்களின் கருணையையும் பாராட்டையும் பெற்றவர் ஒரு திருடர்

இன்றைய நாள் இணைய உலகில் மக்களின் கருணையையும் பாராட்டையும் பெற்றவர் ஒரு திருடர் என்பதை கேட்டால் ஆச்சர்யமாக இருக்கிறது அல்லவா... உண்மைதான் சீனாவில் நடந்த சம்பவம் தற்போது வைரலாகி வருகிறது. 

சீனாவின் ஹியான் நகரில் ஏடிஎம் பணம் எடுத்துக் கொண்டிருந்த பெண்ணை கத்தியைக் காட்டி மிரட்டுகிறான் ஒரு திருடன். பயந்து போன அந்தப் பெண் 2,500 யான் பணத்தைக் கொடுத்து விட்டால், அதன் பின் பேலன்ஸ் எவ்வளவு இருக்கு என்பதை காட்டச் சொன்ன திருடன் பேங்கில் ஜீரோ பேலன்ஸ் இருப்பதை பார்த்து சிரித்துக் கொண்டே பணத்தை கொடுத்து விட்டு சென்று விடுகிறான். இந்த காட்சி அந்த பகுதியில் இருந்த சிசிடிவி கேமராவில் பதிந்துள்ளது. 

இந்த வீடியோதான் சீனாவின் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. கெடு வாய்ப்பாக அந்த திருடனை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். 

இந்த வீடியோ குறித்து பல நகைச்சுவைகளும், யாரெனத் தெரியாத திருடனுக்கு நல்ல பெயரும், கிடைத்து வருகிறது. இந்த வீடியோவை பார்த்தவர்கள் “என் வங்கிக் கணக்கைப் பார்த்தால் திருடன் அவனுடைய சொந்த பணத்தையும் கத்தி,மற்றும் ஜாக்கெட்டையும் கொடுத்து சென்று விடுவான் என்று கமெண்டுகளை தட்டிய படி உள்ளனர். சில “நல்ல மனிதன்” என்றும் கூறுகின்றனர். 

இந்த சம்பவத்தை பார்த்ததும் உங்களுக்கு தோன்றுவது என்ன? கமெண்ட்டில் உங்கள் கருத்தினை பதிவு செய்யுங்கள்.

 

Click for more trending news