This Article is From Apr 24, 2020

கிணற்றுக்குள் தவறி விழுந்த யானை; மீட்கப்பட்டது எப்படி? வைரல் வீடியோ

மலாய் மகாதேஸ்வர வனவிலங்கு சரணாலயத்தில் உள்ள கிணற்றில் யானை தவறி விழுந்துள்ளது.

கிணற்றுக்குள் தவறி விழுந்த யானை; மீட்கப்பட்டது எப்படி? வைரல் வீடியோ

விவசாய கிணற்றுக்குள் சிக்கிய யானை பத்திரமாக மீட்கப்பட்டது.

கர்நாடகாவில், விவசாய கிணற்றுக்குள் தவறி விழுந்த யானயை ஜேசிபி இயந்திரத்தின் துணையுடன் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளது. இந்திய வனத்துறை அதிகாரி ஏதுகொண்டாலு தனது ட்விட்டரில், மலாய் மகாதேஸ்வர வனவிலங்கு சரணாலயத்தில் உள்ள கிணற்றில் யானை தவறி விழுந்த வீடியோ ஒன்றை பகிர்நிருந்தார். 

அந்த வீடியோவில், தண்ணீருக்குள் இருந்து யானை வெளியே வருவதற்கு போராடி வந்தது. ஆனால், அதனால் முடியாமல் திணறிவந்தது. இதனை பார்வையாளர்கள் கூட்டமும் கிணற்றைச் சுற்றி கூடிவந்து யானையை வேடிக்கை பார்த்து வந்தனர். 

மேலும், அந்த இடத்திற்கு ஜேசிபி இயந்திரம் வரவழைக்கப்பட்டு, மீட்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. ஜேசிபி உதவியுடன் மீட்பு நடவடிக்கை எவ்வாறு எளிதாக்கப்பட்டது என்பதை வீடியோ காட்டுகிறது. அது யானை வெளியே வருவதற்கு சரிவு ஏற்படுத்தி கொடுக்கப்படுகிறது. அதன் மூலம் மேலே ஏறி வரும் யானை அந்த ஜேசிபியை தாக்க முயற்சி செய்கிறது. அத்துடன் அந்த வீடியோவும் நிறைவடைகிறது. 


இதுதொடர்பாக அந்த அதிகாரி தனது பதிவில், இது பாதுகாப்பின் இயல்பான நவடிக்கை என்றும் கருத்து பதிவிட்டுள்ளார். 

மேலும், விவசாய கிணற்றுக்கு சிக்கிய ஆண் யானை பத்திரமாக மீட்கப்பட்டது என்றும் அவர் தெரிவித்துள்ளார். இதற்காக ஒத்துழைப்பு தந்த கிராமத்தினர், காவலர்கள், ஊடகத்தினர் மற்றும் வன ஊழியர்களுக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன் என்று அவர் வீடியோவுடன் பதிவிட்டுள்ளார். 


யானை மீட்கப்படும் இந்த வீடியோவலை 4,000க்கும் மேற்பட்டோர் பார்வையிட்டுள்ளனர். இதில், கமெண்ட் பிரிவில் பலரும் அந்த வனத்துறை அதிகாரிக்கு நன்றி தெரிவித்துள்ளனர். 

இதேபோல், அண்மையில் இதேபோல், 15 அடி ஆழ குழிக்குள் சிக்கிய யானை ஒன்று ஜேசிபி இயந்திரத்தின் துணையுடன் மீட்கப்பட்டது. அந்த வீடியோவும் சமூகவலைதளங்களில் வைரலானது. 

Click for more trending news


.