This Article is From Nov 12, 2018

சத்தீஸ்கரில் இன்று சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு: 4வது முறையாக வெற்றிபெறுமா பாஜக?

Chhattisgarh Assembly Election 2018: சத்தீஸ்கர் மாநிலத்தில் இன்று முதற்கட்டத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடந்து வருகிறது

Election in Chhattisgarh 2018: தேர்தலையொட்டி 1 லட்சம் பாதுகாப்புப் படை வீரர்கள் குவிக்கப்பட்டுள்ளனர்

Raipur:

Chhattisgarh Assembly Polls: சத்தீஸ்கர் மாநிலத்தில் இன்று முதற்கட்டத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடந்து வருகிறது. மாவோயிஸ்ட்களால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள 18 தொகுதிகளுக்கும் பலத்த பாதுகாப்புடன் வாக்குப்பதிவு நடந்து வருகிறது. மாநிலத்தில் மீதம் இருக்கும் 72 தொகுதிகளுக்கு வரும் 20 ஆம் தேதி இரண்டாம் கட்டத் தேர்தல் நடக்கும். ரமண் சிங் தலைமையில் கடந்த 3 முறைகளாக பாஜக பெரும்பான்மை பெற்று ஆட்சி அமைத்து வருகிறது. இந்த முறையும் தேர்தலை வென்று 4வது முறை ஆட்சி அரியணையில் ஏற பாஜக தீவிர பிரசாரம் மேற்கொண்டது. அரசுக்கு எதிரான மனநிலை இருப்பதால், இந்த முறை வெற்றி தங்களுக்குத் தான் என்று காங்கிரஸ் நம்புகிறது. அதே நேரத்தில் காங்கிரஸிலிருந்து பிரிந்த சென்ற முன்னாள் முதல்வர் அஜித் ஜோகி, மாயாவதியுடன் கூட்டணி சேர்ந்துள்ளதால், தேர்தலில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

முக்கிய 10 புள்ளிகள்:

  1. இன்று தேர்தல் நடக்கும் 18 தொகுதிகளில் 8 காங்கிரஸ் வசமும், 10 பாஜக வசமும் இருந்தது. முதற்கட்ட தேர்தலுக்கு பிரசாரம் சூடு பிடித்த நிலையில் பிரதமர் நரேந்திர மோடி, ‘காங்கிரஸ் கட்சி நகர்ப்புற நக்சலிஸத்தை ஆதரிக்கிறது' என்று சாடினார்.
  2. அதே நேரத்தில் காங்கிரஸ் உள்ளூர் விவகாரம் குறித்து அதிகம் பேசியது. விவசாயக் கடன் தள்ளுபடி மற்றும் மது விலக்குக் கொண்டு வருவதாக வாக்குறுதி கொடுத்திருக்கிறது. காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, ‘ரமண் சிங் ஆட்சியில் சத்தீஸ்கரில் ஊழல் மிகவும் பெருகியுள்ளது' என்று தொடர்ந்து குற்றம் சாட்டி வந்தார்.
  3. தேர்தல் நடந்து வருவதற்கு எதிர்ப்பு தெரிவித்து மாவோயிஸ்ட்கள் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகின்றனர். கடந்த பல ஆண்டுகளாக தேர்தலை புறக்கணிக்க வேண்டுமென்று மக்களிடம் மாவோயிஸ்ட்கள் பிரசாரம் செய்து வருகின்றனர்.
  4. மகாராஷ்டிரா, தெலங்கானா, ஒடிசா ஆகிய மாநிலங்களிலிருந்து மாவோயிஸ்ட்கள் சத்தீஸ்கரில் தஞ்சமடைந்துள்ளதாக உளவுத் துறை வட்டாரம் தகவல் தெரிவித்துள்ளது. இதையடுத்து பாதுகாப்பு நடவடிக்கை மேலும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
  5. சத்தீஸ்கர் சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி, 1 லட்சம் பாதுகாப்புப் படை வீரர்கள் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டுள்ளனர். 12-க்கும் மேற்பட்ட ஹெலிகாப்டர்கள் தொடர்ந்து ரோந்துப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
  6. கன்கர் மாவட்டத்தில் இருக்கும் அன்டகார் மாநிலத்தில் இன்று காலை தாக்குல் சம்பவம் நடைபெற்றதாக கூறப்படுகிறது. பி.எஸ்.எஃப் பாதுகாப்புப் படையைச் சேர்ந்த வீரர்கள், அன்டகார் கிராமத்தில் ரோந்துப் பணியில் ஈடுபட்ட போது அவர்கள் தாக்குதலுக்கு உள்ளானதாக கூறப்படுகிறது.
  7. 66 வயதாகும் ரமண் சிங், தொடர்ந்து மூன்று முறையாக சத்தீஸ்கர் மாநிலத்தில் முதலமைச்சராக இருந்து வருகிறார். இந்த முறை அவர் ராஜ்நத்ந்கோன் தொகுதியிலிருந்து போட்டியிடுகிறார்.
  8. அஜித் ஜோகி தலைமையிலான கூட்டணி, பழங்குடியின சமூகத்தினரிடையே பிரபலமாக உள்ளதாக பார்க்கப்படுகிறது. ஜோகி தலைமையிலான கூட்டணி காங்கிரஸ் ஓட்டைப் பிரிக்கும் என்று கூறப்படுகிறது.
  9. 'நான் தேர்தலுக்காக கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என்றால், என்னை சிறையில் அடைக்கலாம்' என்று அஜித் ஜோகி சமீபத்தில் பேசியுள்ளார். மேலும் இந்த சவாலுக்கு பாஜக மற்றும் காங்கிரஸ் தயாரா என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
  10. வரும் 20 ஆம் தேதி சத்தீஸ்கரில் இரண்டாம் கட்ட வாக்குப் பதிவு நடக்கும். அதைத் தொடர்ந்து அடுத்த மாதம் 11 ஆம் தேதி தேர்தல் முடிவுகள் வெளியிடப்படும்.

.