விராட் கோலி வெளியிட்ட வேடிக்கையான படத்தை மீமாக்கிய நெட்டிசன்கள்!

விராட் கோலி வெளியிட்ட வேடிக்கையான படத்தை மீமாக்கிய நெட்டிசன்கள்!

விராட் கோலி ட்விட்டரில் பதிவிட்ட புகைப்படத்தை பார்த்து இப்போது அனைவரும் சிரிக்கும்படியான மீமாக மாறியுள்ளது.

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி வித்தியாசமான முகபாவங்கள் வெளிப்படுத்துவது வழக்கமாக கொண்டுள்ளார். 2017ம் ஆண்டு நாக்கை வெளியே நீட்டும் புகைப்படம் ட்விட்டரில் மீமாக மாறியது. இந்த முறை, 31 வயதான கிரிக்கெட் வீரர் ட்விட்டரில் பகிர்ந்து கொண்ட ஒரு வேடிக்கையான படம், மீம் கிரியேட்டர்களுக்கு புதிய உற்சாகத்தை அளித்துள்ளது. விராட் கோலி புகைப்படத்துடன் ஒரு கேள்வியையும் சேர்த்து பதிவிட்டார். இந்தப் புகைப்படத்தில் கோலியுடன் முகமது ஷமி மற்றும் பிரித்வி ஷா வித்தியாசமான முக பாவனைகளை செய்தனர்.

“புதிய  போஸ்ட் அழகாக உள்ளது” என்று கோலி பதிவிட்டார்.

அந்தப் புகைப்படம் பதிவிட்டவுடன் ரசிகர்கள் பல மீம்ஸ்களால் இடுகையை நிரப்பினர். பதிவிட்ட சில மணி நேரத்தில் 1.5 லட்சம் கைக்ஸ் மற்றும் 7000 ரோ-ட்விட்கள் செய்யப்பட்டுள்ளன.

Newsbeep

படத்தைப் பயன்படுத்தியவர்களில் நாக்பூர் போலீசாரும் ஒருவர். ஆபத்தான மண்டை உடையும் சவாலுக்கு எதிராக எச்சரிக்க, விராட் கோலியின் வேடிக்கையான புகைப்படத்தை காவல் துறை பகிர்ந்து கொண்டது.

இந்தப் புகைப்படத்தை வைத்து ஏராளமான மீம்கள் தயாரிக்கப்பட்டன.. அதில் சில இங்கே:

விராட் கோலி, இன்ஸ்டாகிராமில் 50 மில்லியன் ஃபாலோவர்கஸை பெற்ற முதல் இந்தியர் ஆனார். விராட் கோலி இப்போது நியூசிலாந்தில் உள்ளார். அவருடைய அணி பிப்ரவரி 21ம் தேதி தொடங்கும் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் முதல் போட்டியில் ஆடவுள்ளது.

Click for more trending news