This Article is From Jul 20, 2020

“இதைப் போல ஒரு ஆமையைப் பார்த்தது கிடையாது!”- ஆச்சரியமூட்டும் ‘மஞ்சள் ஆமையின்’ வீடியோ

இந்த மஞ்சள் நிற ஆமையின் வீடியோ மற்றும் புகைப்படங்களைப் பார்த்துப் பலரும் ஆச்சரியத்தில் கமென்ட் பதிவிட்டு வருகின்றனர்.

“இதைப் போல ஒரு ஆமையைப் பார்த்தது கிடையாது!”- ஆச்சரியமூட்டும் ‘மஞ்சள் ஆமையின்’ வீடியோ

பாலசோர் மாவட்டத்தில் சுஜான்பூர் கிராமத்தில், இந்த ஆமையை கிராமவாசிகள் மீட்டுள்ளனர்.

ஹைலைட்ஸ்

  • ஒடிசா மாநிலத்தில் இந்த ஆமை தென்பட்டுள்ளது
  • ஆமை தற்போது பத்திரமாக மீட்கப்பட்டுள்ளது
  • இது ஒரு 'அல்பினோ' வகை ஆமையாக இருக்கலாம் எனப்படுகிறது
Balasore:

ஒடிசாவின் பாலசோர் மாவட்டத்தில் மிகவும் வித்தியாசமான ஆமை ஒன்று பிடிபட்டுள்ளது. ஒடிசா மாநிலத்தின் தலைநகரமான புபனேஷ்வரிலிருந்து பாலசோர் சுமார் 196 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. அங்கு பிடிபட்டது ஒரு மஞ்சள் நிற அரிய வகை ஆமை. இந்த விலங்கு குறித்தான வீடியோ இணையத்தில் வைரலாகி பார்ப்போரை ஆச்சரியப்பட வைத்துள்ளது. 

இந்த ஆமை பிடிபட்டது குறித்து, மூத்த வனத் துறை அதிகாரி ஒருவர், “இந்த ஆமையின் மொத்த ஓடு மற்றும் உடல் மஞ்சள் நிறத்தில் உள்ளது. இது மிகவும் அரிய வகை ஆமைதான். நான் இதைப் போன்ற ஒன்றைப் பார்த்ததே இல்லை” என்று வியப்புடன் ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திடம் தகவல் தெரிவிக்கிறார். 

பாலசோர் மாவட்டத்தில் சுஜான்பூர் கிராமத்தில், இந்த ஆமையை கிராமவாசிகள் மீட்டுள்ளனர். ஆமை பிடிபட்ட உடன், வனத் துறை அதிகாரிகளுக்குத் தகவல் தெரிவித்துள்ளனர் மக்கள். 

இது குறித்தான வீடியோவைப் பகிர்ந்த, இன்னொரு வனத் துறை அதிகாரியான சுசாந்தா நந்தா, “இது ஒரு அல்பினோ வகை ஆமையாக இருக்கும். சிந்து பகுதியில் இதைப் போன்ற ஒரு ஆமை சில ஆண்டுகளுக்கு முன்னர் தென்பட்டதாக அங்குள்ள மக்கள் தகவல் கொடுத்துள்ளனர்” என்கிறார். 

ஆமையின் ஒரு க்ளோஸ்-அப் படத்தைப் பகிர்ந்த நந்தா, “இந்த ஆமையின் பிங்க் நிற கண்களைப் பாருங்கள். இது ஆல்பினோவாக இருப்பதற்கு வாய்ப்புகள் அதிகம்” என்று தகவல் கூறுகிறார். 

இந்த மஞ்சள் நிற ஆமையின் வீடியோ மற்றும் புகைப்படங்களைப் பார்த்துப் பலரும் ஆச்சரியத்தில் கமென்ட் பதிவிட்டு வருகின்றனர். 

(With inputs from ANI)

Click for more trending news


.