இரு கரடிக் குட்டிகள் போட்ட Wrestling… ரசித்து பார்த்த பெரிய கரடி… க்யூட் வைரல் வீடியோ!

முகநூலில் பகிரப்பட்ட இந்த வீடியோ ட்விட்டரிலும் ஒரு ரவுண்டு வந்துள்ளது.

இரு கரடிக் குட்டிகள் போட்ட Wrestling… ரசித்து பார்த்த பெரிய கரடி… க்யூட் வைரல் வீடியோ!

23 லட்சம் வியூஸ்களைப் பெற்ற இந்த வீடியோ பல்லாயிரக்கணக்கான முறை பகிரப்பட்டுள்ளன.

காட்டு விலங்குகளின் சில வீடியோக்கள் நம் முகத்தில் சிரிப்பை வரவழைக்கும் வகையில் இருக்கும். அப்படியான ஒரு வீடியோதான் சமீபத்தில் வைரலாகியுள்ளது. இரண்டு கரடிக் குட்டிகள் மல்யுத்தத்தில் ஈடுபட, அதை ஒரு பெரிய கரடி தள்ளி நின்று வேடிக்கைப் பார்க்கிறது. சிறு வயதில், சகோதரர்கள் மற்றும் சகோதரிகளுக்கு இடையில் போட்ட சண்டைகளை நியாபகப்படுத்தும் வகையில் அமைந்துள்ளது இந்த வீடியோ. இதனால் இதற்கு பல லட்சம் பார்வைகள் குவிந்துள்ளன. 

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் அமைந்துள்ள பிக் பெண்டு தேசியப் பூங்காவில் இந்த வீடியோ எடுக்கப்பட்டுள்ளது. 41 நொடிகள் ஓடும் இந்த வீடியோவில், இரண்டு கரடிக் குட்டிகள் முட்டி மோதி, எழுந்து புரண்டு மல்யுத்தம் போன்ற விளையாட்டில் ஈடுபடுகிறது. இதை சற்றும் கண்டு கொள்ளாமல் ஒரு பெரிய கரடி ஓரத்தில் நின்றிருக்கிறது. கடைசியாக வீடியோ முடியும்போது, நான்காவதாக ஒரு கரடி இருப்பது தெரிகிறது. அது ஒரு சின்னக் கரடிக் குட்டி. இந்த இரு கரடிகளின் சண்டையைப் பார்த்து அரண்டு போய் அது ஒரு பக்கெட்டில் பதுங்கியிருக்கிறது. இந்த சம்பவத்தின் வீடியோ பலரை கண்ணீர் வரும் அளவுக்கு சிரிக்க வைத்துள்ளது. 

வீடியோவைப் பார்க்க:

23 லட்சம் வியூஸ்களைப் பெற்ற இந்த வீடியோ பல்லாயிரக்கணக்கான முறை பகிரப்பட்டுள்ளன. சிலரின் கருத்துகள்,

“மிகவும் அழகான உயிரினம் கரடி. அதன் அம்மா அப்படியே அனாமத்தாக பார்க்கிறது. இன்னொரு குட்டிக் கரடி பதுங்கியிருப்பது க்யூட்” என்கிறார் ஒருவர்,

இன்னொருவர், “அம்மா பிரேக் எடுக்கும்போது மற்ற இரண்டு கரடிக் குட்டிகளும் கட்டிப் புரளுகிறது போல. அழகு” என்று மெய் சிலிர்க்கிறார்.

முகநூலில் பகிரப்பட்ட இந்த வீடியோ ட்விட்டரிலும் ஒரு ரவுண்டு வந்துள்ளது. 

Click for more trending news