கிடா மானை வாயில் ‘லபக்கென்று’ கவ்வி, அசால்டாக மரத்தில் ஏறிய சிறுத்தை… வைரல் க்ளோஸ்-அப் வீடியோ!

Viral Video: ஆன்லைனில் இந்த வீடியோ பகிரப்பட்டதில் இருந்து 1.5 லட்சம் முறை பார்க்கப்பட்டுள்ளது.

கிடா மானை வாயில் ‘லபக்கென்று’ கவ்வி, அசால்டாக மரத்தில் ஏறிய சிறுத்தை… வைரல் க்ளோஸ்-அப் வீடியோ!

Viral Video: “முரட்டுத்தனமான சக்தி. எப்படி ஏற வேண்டும் என்று கச்சிதமாக கணக்குப் போட்டுள்ளது சிறுத்தை,” என்கிறார் ஒரு பயனர்

Viral Video: மாமிச பட்சியான சிறுத்தையின் போர்க் குணம் பற்றி நிறைய கேள்விப்பட்டிருப்போம். ஆனால், அது தன் இரையை வாயில் வைத்து, மரத்தில் ஏறும் கம்பீரத்தைப் பார்த்திருக்கிறீர்களா. அப்படிப்பட்ட ஓர் அரியக் காட்சி தற்போது வெளிவந்துள்ளது. இது குறித்தான வீடியோவை இந்திய வனத் துறை அதிகாரி, பிரவீன் கஸ்வான், தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். 

காரின் உள்ளே இருந்து எடுக்கப்பட்ட அந்த வீடியோவில், சிறுத்தை ஒன்று மரத்திற்குக் கீழ் நிற்பது தெரிகிறது. அதற்கு அருகிலேயே வேட்டையாடப்பட்ட மானும் இறந்த நிலையில் கிடக்கிறது. திடீரென்று, கிடா மானை லபக்கென்று வாயில் லாகவமாக கவ்வி, செங்குத்தான மரத்தில் அசால்டாக ஏறுகிறது சிறுத்தை. ஒன்றரை நிமிடம் ஓடும் இந்த வீடியோ, பார்ப்போரை ‘வாவ்' போட வைத்துள்ளது. 

இந்த வீடியோவைப் பகிர்ந்த பிரவீன், “நம்ப முடியாத வகையில் மரத்தில் ஏறுகிறது சிறுத்தை. இந்த மிருகம், தன்னைவிட 3 மடங்கு எடை அதிகம் கொண்ட இரையை வாயில் கவ்விக் கொண்டு மரத்தில் ஏற முடியுமென்று உங்களுக்குத் தெரியுமா?” எனப் பதிவிட்டிருந்தார். 

வீடியோவைப் பார்க்க:

மேலும் அவர், “சிறுத்தை வாழும் இடங்களில், இரையை சாப்பிட்டுவிட்டு மீதியை மரத்திலேயே விட்டுவிடும் காட்சியையும் பாரக்க முடியும்,” என்றார். அவரின் இந்த போஸ்டுக்கு லைக்ஸும், கமென்ட்ஸும் அள்ளியது. 

ஆன்லைனில் இந்த வீடியோ பகிரப்பட்டதில் இருந்து 1.5 லட்சம் முறை பார்க்கப்பட்டுள்ளது. 10,000 லைக்ஸ்களையும் குவித்துள்ளது. பலரும் வியந்து கருத்து பதிவிட்டு வருகின்றனர்.

“முரட்டுத்தனமான சக்தி. எப்படி ஏற வேண்டும் என்று கச்சிதமாக கணக்குப் போட்டுள்ளது சிறுத்தை,” என்கிறார் ஒரு பயனர். இன்னொரு ட்விட்டர் பயனர், “ஓ மை… ஒரு நிமிடத்தில் எந்த பிசிறும் இல்லாமல் பக்காவாக வேலை செய்து முடித்துவிட்டது. நம்பவே முடியவில்லை,“ என்று வியக்கிறார். 


 

Click for more trending news