This Article is From Mar 16, 2020

இப்படிப்பட்ட வினோதமான உயிரினத்தை பார்த்திருக்கீங்க..?- இணையத்தை ‘திக்குமுக்காட’ வைத்த வைரல் வீடியோ!!

Viral Video - பகிரப்பட்ட சில மணி நேரத்திலேயே இந்த வீடியோ, 3,200 முறைக்கு மேல் பார்க்கப்பட்டுள்ளது.

இப்படிப்பட்ட வினோதமான உயிரினத்தை பார்த்திருக்கீங்க..?- இணையத்தை ‘திக்குமுக்காட’ வைத்த வைரல் வீடியோ!!

Viral Video - பலரும் இந்த உயிரினத்தைப் பற்றி வியந்து கருத்திட்டு வருகிறார்கள். 

ட்விட்டரில் வைரலாகி வரும் ஒரு வீடியோவால், இணையத்தில் பல்வேறு குழப்பங்கள் எழுந்துள்ளன. இந்திய வனத் துறை அதிகாரி பிரவீன் கஸ்வானால் பகிரப்பட்டுள்ள 44 நொடிகளே கொண்ட வீடியோவில், ஒரு பூச்சி போல உயிரினம் மெல்ல மரத்தின் கிளைகளில் ஊர்ந்து செல்கிறது. இந்த வினோதமான உயிரினத்தைச் சிலர், ‘அரிய வகைப் பூச்சி' என்றும் சிலர், வெட்டுக்கிளி என்றும் யூகித்துள்ளனர். 

கஸ்வான் வீடியோவைப் பகிர்ந்து, “இயற்கை ஒவ்வொரு விஷயத்தையும் நுணுக்கமாகக் கட்டமைத்துள்ளது. அப்படிப்பட்ட நுணுக்கமான விஷயங்களை நாம் பல நேரங்களில் பார்ப்பது கூட கிடையாது. மரியா சாகோன் எடுத்த வீடியோ இது. நம்புங்கள், இதைப் போன்ற ஒரு உயிரினத்தை நீங்கள் பார்த்திருக்க மாட்டீர்கள். அமேசிங் நேச்சர்,” என்று நெகிழ்ச்சியோடு பதிவிட்டுள்ளார். 

பகிரப்பட்ட சில மணி நேரத்திலேயே இந்த வீடியோ, 3,200 முறைக்கு மேல் பார்க்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில், பலரும் இந்த உயிரினத்தைப் பற்றி வியந்து கருத்திட்டு வருகிறார்கள். 

“இதைப் போன்ற பல பூச்சிகளின் படங்களைப் பார்த்துள்ளோம். ஆனால், இப்படி அது நடக்கும் என்பதை இப்போதுதான் பார்க்கிறோம். மிக மிக வினோதம்,” என்கிறார் ஒரு பயனர். 

இன்னொருவரோ, “என்னது இது..?” என்று அதிர்ச்சிக் கருத்திட்டுள்ளார்.

மற்றொருவரோ, “இதைப் போன்ற ஒரு உயிரினத்தை நான் பார்த்ததே இல்லை… இதன் பெயர் என்ன?“ என்று கேள்வியெழுப்பியுள்ளார். 

வெகு சிலரோ, இந்த உயிரினத்தின் பெயர் என்ன என்பது குறித்து யூகித்து கருத்து பதிவிட்டுள்ளனர். 

Click for more trending news


.