This Article is From Jul 03, 2020

ஒரு சொட்டு நீர் சொட்டாமல் டம்ப்ளரை சுற்றி சுற்றி வித்தைக்காட்டிய வாலிபர்; வைரல் வீடியோ!

இது இயற்பியல் விதிகளைப் பறைசாற்றும் வகையில் இருக்கிறது என்று சிலர் கூறி பெருமிதப்பட்டனர். 

ஒரு சொட்டு நீர் சொட்டாமல் டம்ப்ளரை சுற்றி சுற்றி வித்தைக்காட்டிய வாலிபர்; வைரல் வீடியோ!

பல லட்சம் பார்வைகளைப் பெற்றுள்ள இந்த வீடியோவுக்கு லைக்ஸ்களும் அள்ளி வருகின்றன. 

தற்காப்புக் கலையான சிலம்பம் வைத்து வித்தைக்காட்டும் பலரைப் பார்த்திருப்போம். ஆனால், சிலம்பம் போன்றே கயிறை வைத்து வித்தைக்காட்டிய நபரைப் பார்த்திருக்கிறீர்களா? அதுவும் கயிற்றின் இரு முனையிலும் இரு டம்பளர் வைத்து, அதில் நீர் நிரப்பி, அந்த நீரின் ஒரு சொட்டைக் கூட கீழே சிந்தாமல் வித்தைக்காட்டும் நபரைப் பார்த்திருக்கிறீர்களா? அப்படியொரு நபரின் வீடியோதான் ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் படுவைரலாக மாறி வருகிறது. 

வீடியோவில், ஒரு நபர், இரண்டு டம்ப்ளர்களில் தண்ணீர் நிரப்புகிறார். அதை கயிற்றின் இரு முனைகளிலும் வைத்து, அப்படியே லாகவமாகத் தூக்குகிறார். பொறுமையாக கயிறை முன்னும் பின்னும் அசைத்து, தலை மீதி எடுத்துச் செல்கிறார். அவ்வளவுதான் அடுத்த சில நொடிகளுக்கு மின்னல் வேகத்தில் கயிற்றை சிலம்பம் சுற்றுவது போல சுற்றுகிறார். ஒரு கட்டத்தில் கயிற்றின் வேகத்தைக் குறைத்து, டம்ப்ளர் பழைய நிலைக்குக் கொண்டு வரப்படுகிறது. அதிலிருந்து ஒரு சொட்டுத் தண்ணீர் கூட கீழே சிந்தவில்லை. வீடியோவின் முடிவில் அந்தத் தண்ணீரைக் குடித்துவிட்டு ஒரு சல்யூட் அடிக்கிறார் அந்த வித்தகர். 

இந்த வீடியோவைப் பலரும் பகிர்ந்து, அதில் வரும் நபரைப் பாராட்டி வருகிறார்கள். அவர் சென்னையின் கண்ணகி நகரைச் சேர்ந்த சரத் என்றும், குடிசைவாழ் பகுதிகளில் வசிக்கும் சிறுவர்களுக்கு கல்வி பயிற்றுவிப்பவர் என்றும் சொல்லப்படுகிறது. 

வீடியோவைப் பார்க்க:

பல லட்சம் பார்வைகளைப் பெற்றுள்ள இந்த வீடியோவுக்கு லைக்ஸ்களும் அள்ளி வருகின்றன. 

சரத்தைத்தான் பலரும் பாராட்டினர். அதேபோல, இது இயற்பியல் விதிகளைப் பறைசாற்றும் வகையில் இருக்கிறது என்று சிலர் கூறி பெருமிதப்பட்டனர். 

Click for more trending news


.