வைரல் வீடியோ: ஆர்வக் கோளாறு ரசிகரை அழகாக எதிர்கொண்ட கத்ரீனா கைஃவ்

ரசிகர்களை பொறுமையாக கையாண்ட விதம் தான் பலரும் கத்ரீனா கைஃவ்வை பாராட்ட காரணமாகியுள்ளது.

 Share
EMAIL
PRINT
COMMENTS
வைரல் வீடியோ: ஆர்வக் கோளாறு ரசிகரை அழகாக எதிர்கொண்ட கத்ரீனா கைஃவ்

நடிகை கத்ரீனா கைஃவ் (Image courtesy: katrinakaif)

New Delhi: 

ஹைலைட்ஸ்

  1. கத்ரீனா கைஃவ்வின் வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகியுள்ளது
  2. கத்ரீனா கைஃவ் ரசிகரை பொறுமையாக கையாண்டார்
  3. கத்ரீனா கைஃவ் நடித்து சமீபத்தில் வெளியான படம் ’பாரத்’

பாலிவுட் நடிகை கத்ரீனா கைஃவ்வின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. ஒரு ஆர்வக்கோளாறான ரசிகரை அழகாக எதிர்கொண்ட சமாளித்த விதத்தை பலரும் பாராட்டி வருகின்றனர். 

விமான நிலையத்தில் சில ஆண் ரசிகர்கள் கத்ரீனா கைஃவ்வுடன் இணைந்து செல்ஃவி எடுக்க முயல்கின்றனர். அதில் ஒரு ரசிகர் விடாப்பிடியாக கத்ரீனா கைஃவ்வுடன் நெருக்கமாக நின்று புகைப்படம் எடுக்க கத்ரீனா கைஃவ்வின் பாதுகாவலர்கள் அவரை தடுத்து நிறுத்த முயல்கின்றனர். ஆனால் அவர் விடாப்பிடியாக செல்ஃபி எடுக்க முயல, கத்ரீனா கைஃவ் ‘புகைப்பட்டம் எடுங்கள், போதுமான இடைவெளி விட்டு நின்று எடுங்கள்' என்று கூறினார்.

ரசிகர்களை பொறுமையாக கையாண்ட விதம் தான் பலரும் கத்ரீனா கைஃவ்வை பாராட்ட காரணமாகியுள்ளது. 

சமூக வலைதளத்தில் ஒருவர் “ஒவ்வொருவருக்கும் தனிப்பட்ட இடம் என்பது உண்டு. ரசிகரை நேர்த்தியாக எதிர்கொண்டுள்ளார் கத்ரீனா கைஃவ்” என்று பாராட்டியுள்ளார். (இந்த செய்தி NDTV ஊழியரால் எடிட் செய்யப்படவில்லை. சிண்டிகேட்டெட் ஃபீட் மூலம் தானாக உருவாக்கப்பட்டது.)

சமீபத்திய தமிழ்நாட்டுச் செய்திகள் சென்னை செய்திகள், அரசியல், வர்த்தகம், தொழில்நுட்பம், கிரிக்கெட் ஆகியவற்றின் தலைப்புச் செய்திகள் என ஒவ்வொரு நிகழ்வுகளையும் பற்றி தமிழில் படிக்க Facebook மற்றும் ட்விட்டர் Twitter ஐ பின் தொடருங்கள்.

NDTV Beeps - your daily newsletter

................................ Advertisement ................................

................................ Advertisement ................................

................................ Advertisement ................................