This Article is From Feb 19, 2020

குட்டி நாயுடன் கொஞ்சி விளையாடும் புறா!! இணையத்தில் வைரலாகும் வீடியோ!

மியா அறக்கட்டளையில் ஹெர்மனும், லூன்டியும் ஒரே அறையில்தான் வசிக்கின்றன.

குட்டி நாயுடன் கொஞ்சி விளையாடும் புறா!! இணையத்தில் வைரலாகும் வீடியோ!

அழகாக காட்சியளிக்கும் நாய் லூன்டி மற்றும் புறா ஹெர்மன்

அமெரிக்காவின் நியூயார்க் நகரை மையமாக கொண்டுசெயல்பட்டு வரும் மியா அறக்கட்டளையில், ஹெர்மன் என்ற புறாவும், லூன்டி என்ற நாயும் நட்பு பாராட்டி வருகின்றன. 

குட்டி நாயை புறா ஹெர்மன் கொஞ்சி விளையாடும் காட்சிகள் இணையத்தில் வைரலாகின்றன.

மியா அறக்கட்டளை என்பது பாதிக்கப்பட்ட விலங்குகள் மற்றும் பறவைகளை தத்தெடுத்து வளர்க்கும் ஓர் நிறுவனமாகும். இங்கு 8 வாரமே ஆன, கால் ஒடிந்த லூன்டி என்ற குட்டி நாய் பராமரிக்கப்பட்டு வருகிறது. இதேபோன்று மூளை பாதிப்பு அடைந்து பறக்க முடியாமல் இருக்கும் ஹெர்மன் என்ற புறாவும் இங்கு பராமரிக்கப்படுகிறது. 

இந்த நிலையில் குட்டி நாயும், புறாவும் கொஞ்சி விளையாடி வருகின்றனர். ஒருவருக்கொருவர் அன்பை பரிமாறிக்கொள்ளும் காட்சி பார்ப்போருக்கு நெகிழ்ச்சியை ஏற்படுத்துகின்றன. 

ஹெர்மன் - லூன்டியின் புகைப்படங்கள் பேஸ்புக்கு, இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதள பக்கங்களில் வைரலாக பரவுகின்றன. 

பதிவேற்றம் செய்யப்பட்டு குறுகிய காலத்திற்குள் 21 ஆயிரம் லைக்குகள், 45 ஆயிரம் ஷேர்களை கடந்துள்ளன இந்த புகைப்படங்கள். 

'இணையத்தில் மிகவும் அழகான காட்சியை பார்க்கிறேன்' என்று பயனர் ஒருவர் கமென்ட்டில் தெரிவித்துள்ளார். 'இந்த புகைப்படங்கள் எனது நாளை அழகாக்கியுள்ளன. இவை விலை மதிப்பற்றவை' என்று இன்னொரு பயனர் கூறியுள்ளார். 'என்ன அழகான புறா இது! குட்டி நாயை தனது சிறகுகளுக்குள் வைத்துக்கொள்கிறதே!' மற்றொரு பயனர் தெரிவித்துள்ளார். 

மியா அறக்கட்டளையை சுயூ ரோஜர்ஸ் என்பவர் நடத்தி வருகிறார். அவர் செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் குட்டிப்புறாவுக்கும், நாய்க்கும் இடையே 6 வாரங்களுக்கு முன்பாக நட்பு ஏற்பட்டது என்று தெரிவித்தார். 

'புறாவும் நாயும் மிக அழகாக உள்ளன. அவற்றை நான் புகைப்படம் எடுத்துக்கொண்டேன். இந்த புகைப்படங்களை நான் பேஸ்புக்கில் பதிவிட மறுநாள் காலை ஏராளமானோர் அதை லைக் செய்துள்ளனர்.' என்று ரோஜர்ஸ் கூறியுள்ளார். 

வைரலாக பரவிய இந்த புகைப்படங்கள் மியா அறக்கட்டளைக்கு நன்கொடைகளை பெற்றுத்தர உதவியுள்ளன. 

இதன் மூலம் 6 ஆயிரம் அமெரிக்க டாலர் கிடைத்திருப்பதாக ரோஜர்ஸ் கூறினார். 

வெவ்வேறு விலங்குளுக்கு மத்தியில் அன்பு ஏற்படுவது என்பது புதிதல்ல. முன்னதாக இந்த மாத தொடக்கத்தில், நரியும், குட்டி கரடியும் நட்புடன் பழகிய வீடியோ இணையத்தில் வைரலானது. 

Click for more trending news


.