This Article is From Mar 17, 2020

“விடாமல் கொத்திய பாம்பு - கடித்துக் குதறிய கீரி…”- பகீர் கிளப்பும் வைரல் வீடியோ!

இந்த வீடியோ முதன்முதலாக 5 ஆண்டுகளுக்கு முன்னர் யூ-டியூப் தளத்தில் பகிரப்பட்டது. அது, இதுவரை 60 லட்சம் முறை பார்க்கப்பட்டுள்ளது. 

“விடாமல் கொத்திய பாம்பு - கடித்துக் குதறிய கீரி…”- பகீர் கிளப்பும் வைரல் வீடியோ!

viral video - வீடியோ, ட்விட்டரில் பகிரப்பட்டதில் இருந்து 18,000 முறை பார்க்கப்பட்டுள்ளது. பலரும் இந்த அரிய வகை வீடியோவைப் பார்த்து ஆச்சரியத்தில் கருத்திட்டு வருகிறார்கள்.

பாம்பும் கீரிப் பிள்ளையும் சண்டையிடும் ஒரு பழைய வீடியோ, இணையத்தில் மீண்டும் பகிரப்பட்டு வைரலாகியுள்ளது. இந்த வீடியோவை இந்திய வனத் துறை அதிகாரி சுசாந்தா நந்தா, தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். 

பாம்பு சீண்டினால் பெரும்பான்மையான உயிரினங்களுக்கு நஞ்சு ஏறிவிடும் என்றாலும், கீரிப் பிள்ளைக்கு அப்படி ஆகாது. அது குறித்து விளக்கும் ‘நியூ சைன்டிஸ்ட்' என்னும் தளம், கீரிப் பிள்ளைகள் பாம்பைவிட வேகமாக நகரும் தன்மையைக் கொண்டிருக்கும் என்கிறது. மேலும், பாம்பு கொத்தினால் அதன் நஞ்சு கீரிகளுக்கு பாயாதாம். காரணம், கீரிப் பிள்ளைகளுக்கு அசிட்டோகோலின் என்னும் எதிர்ப்பு சுரப்பி, அதன் உடலில் நஞ்சின் நச்சுத் தன்மையை ஏறவிடாதாம்.

நந்தா பகிர்ந்துள்ள வீடியோவில், மக்கள் சூழ்ந்திருக்கும் சாலையில் கீரியும் பாம்பும் சண்டையிடுகின்றன. பாம்பு மீண்டும் மீண்டும் கீரியைக் கொத்தப் பார்க்கிறது. ஆனால் கீரியோ, லாகவமாகப் பாம்பிடமிருந்து நகர்ந்து, அதைத் தாக்கிச் சாய்க்கிறது.

நந்தா, வீடியோவுடன், “விலங்குகள் பாம்பைக் கொல்ல நினைத்தால் அது தற்கொலையில்தான் போய் முடியும். ஆனால் கீரிகளுக்கு அப்படியில்லை. பல லட்சம் ஆண்டுகள் பாம்புகளுடன் இருந்த காரணத்தினால், அதன் நஞ்சை எதிர்கொள்ள கற்றுக் கொண்டன கீரிகள். விரைந்து நகரும் தன்மை, தடிமனான தோல் மற்றும் கிளைக்கோபுரோட்டீன் உள்ளிட்டவை கீரிகளுக்கு நச்சுத்தன்மையை முறியடிக்க உதவுகின்றன. அதன் வலிமையான தாடைகளால் நாகப் பாம்பு உடனடியாக வீழ்ந்து போகிறது,” என்று பதிவிட்டுள்ளார். 

வீடியோவைப் பார்க்க:
 

வீடியோ, ட்விட்டரில் பகிரப்பட்டதிலிருந்து 18,000 முறை பார்க்கப்பட்டுள்ளது. பலரும் இந்த அரிய வகை வீடியோவைப் பார்த்து ஆச்சரியத்தில் கருத்திட்டு வருகிறார்கள். 

இந்த வீடியோ முதன்முதலாக 5 ஆண்டுகளுக்கு முன்னர் யூ-டியூப் தளத்தில் பகிரப்பட்டது. அது, இதுவரை 60 லட்சம் முறை பார்க்கப்பட்டுள்ளது. 

Click for more trending news


.