This Article is From Mar 03, 2020

“வகைதொகையில்லாம செஞ்ச நெட்டிசன்ஸ்”- போட்டோஷாப் படங்களுக்கு டிரம்ப் மகளின் ‘ஆகா’ ரியாக்‌ஷன்!!

அதிபர் டிரம்பின், மூத்த ஆலோசகர்களில் ஒருவராகச் செயல்பட்டு வருபவர் இவான்கா.

“வகைதொகையில்லாம செஞ்ச நெட்டிசன்ஸ்”- போட்டோஷாப் படங்களுக்கு டிரம்ப் மகளின் ‘ஆகா’ ரியாக்‌ஷன்!!

இவான்கா, இந்த எடிட் செய்யப்பட்ட போட்டோக்கள் பற்றி மேலும், “நான் பல நண்பர்களைப் பெற்றுள்ளேன்,” என்று கிண்டலாக டிவிட்டரில் பதிவிட்டுள்ளார். 

ஹைலைட்ஸ்

  • அமெரிக்க அதிபர் டிரம்பின் மகள் இவான்கா டிரம்ப்
  • சமீபத்தில் இந்தியாவுக்கு வருகை தந்தார் அதிபர் டிரம்ப்
  • அப்போது இவான்காவும் தனது கணவருடன் வந்திருந்தார்

சமீபத்தில் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், இந்தியாவுக்கு இரண்டு நாட்கள் சுற்றுப் பயணம் வந்திருந்தார். தன் மனைவி மெலனியாவுகடன் தனி விமானத்தில் அதிபர் டிரம்ப், பிரதமர் மோடியின் அழைப்பின் பேரில் இந்தியா வந்தார். அவருடன் அவரது மகள் இவான்கா டிரம்ப் மற்றும் மருமகன் ஜேரட் குஷ்னரும் வந்திருந்தனர். இவான்காவும் அவரது கணவரும் பல்வேறு இடங்களுக்குச் சென்று டிசைன் டிசைனாக போட்டோ எடுத்துக் கொண்டனர். இவான்கா, தான் இந்தியாவில் எடுத்த புகைப்படங்களைத் தனது அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராமில் பதிவேற்றினார். அவ்வளவுதான்ஞ் வரிந்துகட்டிக் கொண்டு வந்த நெட்டிசன்ஸ், இவான்காவுடன் தங்களின் போட்டோக்களையும் போட்டு ரகளை செய்து விட்டனர். இது இவான்காவின் கவனத்திற்குச் செல்ல, அவரும் அதற்கு ரியாக்ட் செய்துள்ளது வைரலாகியுள்ளது. 

“இந்திய மக்களின் அன்பிற்கு நன்றி,” என்று நெகிழ்ச்சிப்பூரவமாக போட்டோஷாப் செய்த படங்கள் பற்றிக் கூறியுள்ளார் இவான்கா. அவர் தாஜ்மகால் சென்று எடுத்த புகைப்படங்கள்தான் போட்டோஷாப்பிற்கு அதிகமாகப் பயன்படுத்தப்பட்டுள்ளன. 

இவான்கா, இந்த எடிட் செய்யப்பட்ட போட்டோக்கள் பற்றி மேலும், “நான் பல நண்பர்களைப் பெற்றுள்ளேன்,” என்று கிண்டலாக டிவிட்டரில் பதிவிட்டுள்ளார். 

இவான்காவின் இந்த ட்வீட்டும் வைரலாகியுள்ளது. 1.7 லட்சத்திற்கும் அதிகமானோர் அவரின் ட்வீட் பதிவிற்கு லைக் தட்டியுள்ளனர். 

அதிபர் டிரம்பின், மூத்த ஆலோசகர்களில் ஒருவராகச் செயல்பட்டு வருபவர் இவான்கா. சமீபத்திய பயணத்திற்குப் பிறகு, அவர் இந்தியாவுக்கு நன்றி தெரிவித்தார். 

Click for more trending news


.