This Article is From Apr 13, 2020

Cats vs Dogs: குலுங்கி குலுங்கிச் சிரிக்கவைக்கும் வீடியோ கலெக்‌ஷன்!

Cat vs dog challenge: இந்த நாய் vs பூனை விவாதத்தை அடுத்தக் கட்டத்திற்கு எடுத்துச் செல்லும் வகையில் ஆன்லைனில் ஒரு டிரெண்டு வைரலாகி வருகிறது.

Cats vs Dogs: குலுங்கி குலுங்கிச் சிரிக்கவைக்கும் வீடியோ கலெக்‌ஷன்!

Cat vs dog challenge: வீட்டில் கிடைக்கும் பொருட்களை குழப்பமான வரிசையில் அங்கும் இங்கும் அடுக்கி வைக்கப்படுகிறது

Cat vs dog challenge: செல்லப் பிராணிகளில் எது சிறந்தது. நாயா அல்லது பூனையா? இந்தக் கேள்விக்கான விவாதம் பல ஆண்டுகளாக நடந்து வருகின்றன. பூனைப் பிரியர்கள், அதைவிட சுட்டியான ஒரு பிராணி இருக்க முடியாது என்று சொல்வார்கள். நாய் வளர்ப்பவர்கள், அதைப் போல் ஒரு நல்ல நண்பன் உலகில் இல்லை என்று வாதாடுவார்கள். 

இந்த நாய் vs பூனை விவாதத்தை அடுத்தக் கட்டத்திற்கு எடுத்துச் செல்லும் வகையில் ஆன்லைனில் ஒரு டிரெண்டு வைரலாகி வருகிறது. அதன்படி, வீட்டில் கிடைக்கும் பொருட்களை குழப்பமான வரிசையில் அங்கும் இங்கும் அடுக்கி வைக்கப்படுகிறது. சிறு சிறு தடுப்புகளாக உள்ள இந்தப் பொருட்களை எந்த செல்லப் பிராணி, எதையும் தட்டிவிடாமல் சாதுர்யமாக கடந்து வருகிறது என்பதுதான் சேலஞ்ச். 

இந்த சேலஞ்சில் ஆச்சரியப்படும் வகையில் பூனை, இலகுவாக கடந்து வந்துவிடுகின்றன. ஆனால், பெரும்பாலும் நாய்களோ செய்வதறியாமல் திகைத்து, அனைத்துப் பொருட்களையும் தட்டிவிட்டு விடுகின்றன. 

இதைப் போன்ற பல வீடியோக்களைப் பலரும் சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகிறார்கள். அதில் பல வீடியோக்கள் பல லட்சம் பார்வைகளைப் பெறுகின்றன. பலரும் இந்த கியூட் வீடியோக்களுக்குக் கீழ் தங்கள் குசும்புக் கருத்துகளைப் பதிவிட்டு வருகிறார்கள். 

வீடியோக்களைப் பார்க்க:

சில நேரங்களில் நாய்கள் மட்டுமல்ல, பூனைகளும் இந்த சேலஞ்சில் திணறும் என்பதை இந்த வீடியோ மூலம் தெரிந்து கொள்ள முடிகிறது. 

Click for more trending news


.