This Article is From Jun 04, 2019

வைரல்: இந்த ஓவியத்தில் 40 விளம்பரங்கள் உள்ளன, உங்களால் எத்தனையை கண்டுபிடிக்க முடிகிறது?

இந்தியாவின் மிகவும் பிரபலமான விளம்பரங்களின் கதாப்பாத்திரங்கள் மற்றும் காட்சிகள் இந்த ஓவியத்தில் இடம்பெற்றுள்ளன.

வைரல்: இந்த ஓவியத்தில் 40 விளம்பரங்கள் உள்ளன, உங்களால் எத்தனையை கண்டுபிடிக்க முடிகிறது?

ட்விட்டரில் வைரலான 40 விளம்பரங்களை கொண்ட ஓவியம்.

நீங்கள் இந்தியாவில் 80 மற்றும் 90களில் பிறந்தவரா, அப்படி என்றால் உங்களுக்கு இந்த சவால் கண்டிப்பாக பிடிக்கும். தற்போது, இணையதளத்தில் ஒரு ஓவியம் வைரலாகிக்கொண்டிருக்கிறது. "இந்த ஓவியத்தில் இந்தியாவின் தனித்துவமான 40 விளம்பம்பரங்கள் மறைந்திருக்கின்றன, உங்களால் எவ்வளவு விளம்பரங்களை கண்டுபிடிக்க முடிகிறது?", என்ற தலைப்புடன் இந்த ஓவியம் இணையதளத்தில் வைரலாகி வருகிறது. இந்தியாவின் மிகவும் பிரபலமான விளம்பரங்களின் கதாப்பாத்திரங்கள் மற்றும் காட்சிகள் இந்த ஓவியத்தில் இடம்பெற்றுள்ளன.  

முதல் ட்விட்டரில் இந்த ஓவியம் வைரலானது. ஒரு ட்விட்டர் பயன்பாட்டாளர், இந்த ஓவியத்தை தனது பக்கத்தில் பதிவிட்டதை தொடர்ந்து, இது ஆயிரக்கணக்கில் லைக்களை பெற்றுள்ளது. 

இதோ அந்த ஓவியம் உங்கள் பார்வைக்கு, உங்களால் எத்தனை விளம்பரங்களை கண்டுபிடிக்க முடிகிறது?

பலர் இந்த ஓவியத்தில் மறைந்துள்ள விளம்பரங்களை கண்டுபிடிக்க முயற்சிக்கின்றனர். பலர் இந்த ஓவியத்தை வரைந்தவர்களை பாராட்டிக்கொண்டிருக்கின்றனர். இந்த ஓவியத்தில் உள்ள 40 விளம்பரங்களையும் கண்டுபிடித்த ஒருவர், இதனை வரைந்த கலைஞர்களையும் பாராட்டியுள்ளார்.

இதில் சிலர், இந்த ஓவியத்தை வாங்க முடியுமா எனவும் முயற்சிக்கின்றனர்.

மேலும் சிலர், இந்த ஓவியத்தின் மூலமாக தங்கள் குழந்தைப் பருவத்தை நினைவூட்டியதற்கு நன்றியும் தெரிவிக்கின்றனர். 

உங்களால் இந்த ஓவியத்தில் எத்தனை விளம்பரங்களை கண்டறிய முடிகிறது? கமெண்ட் பகுதியில் குறிப்பிடுங்கள்!

Click for more trending news


.