This Article is From Jul 29, 2018

துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு இன்று கருணாநிதியை சந்திக்கிறார்

கருணாநிதியின் உடல் நலம் முன்னேறி வருகிறது. உடல் இரத்த அழுத்தம் சீராக உள்ளது

துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு இன்று கருணாநிதியை சந்திக்கிறார்

சென்னை: சென்னைக்கு வருகை தர இருக்கும் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் திமுக தலைவர் மு.கருணாநிதியை நேரில் சந்தித்து விசாரிக்க உள்ளார்.

குறைந்த இரத்த அழுத்தம் காரணமாக, கடந்த சனிக்கிழமை அன்று திமுக தலைவர் கருணாநிதி சென்னை காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அதனை தொடர்ந்து, தீவிர மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது தொடர் மருத்துவ கண்கானிப்பால், உடல் நலம் முன்னேறி வருவதாக மருத்துவமனை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

காவேரி மருத்துவமனை முதன்மை இயக்குனர், மருத்துவர் அரவிந்தன் செல்வராஜ் வெளியிட்ட அறிக்கையில் "அவரச சிகிச்சை பிரிவில் வைக்கப்பட்டுள்ள திமுக தலைவருக்கு, மருத்துவ வல்லுநர் குழு தொடர்ந்து சிகிச்சை அளித்து வருகிறது" என்று குறிப்பிட்டிருந்தார்

கடந்த சனிக்கிழமை அன்று, திமுக எம்பியும், கருணாநிதியின் மகளுமான கனிமொழி செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, "கருணாநிதியின் உடல் நலம் முன்னேறி வருகிறது. உடல் இரத்த அழுத்தம் சீராக உள்ளது" என்று தெரிவித்தார்.

தமிழ்நாடு ஆளுநர் பன்வாரிலால் புரோகித், காங்கிரஸ் கட்சி தலைவர் குலாம் நபி ஆசாத் போன்ற முக்கிய தலைவர்கள் கலைஞர் கருணாநிதியை மருத்துவமனையில் சந்தித்து நலம் விசாரித்து வருகின்றனர்.

.