This Article is From Aug 07, 2018

கண்ணீருடன் கோபாலபுரம் வந்த கருணாநிதி குடும்பத்தினர்

தமிழகம் முழுவதும் அசாதாரண சூழல் நிலவுவதால், போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர். சென்னை ராஜரத்தினம் மைதானத்தில் போலீஸார் தயார் நிலையில் உள்ளனர்.

கண்ணீருடன் கோபாலபுரம் வந்த கருணாநிதி குடும்பத்தினர்

கருணாநிதியின் உடல் நிலை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாக காவேரி மருத்துவமனை அறிக்கை வெளியிட்ட நிலையில், தொண்டர்கள் காவேரி மருத்துவமனையில் குவியத் தொடங்கியுள்ளனர். சற்றுமுன் கருணாநிதியின் குடும்பத்தார் கண்ணீருடன் காவேரி மருத்துவமனையில் இருந்து வெளியேறி கோபாலபுரம் சென்றனர். துர்கா ஸ்டாலின், மேனகா தமிழரசு, செல்வி ஆகியோர் கோபாலபுரம் சென்றடைந்தனர். காவேரி மருத்துவமனை மற்றும் கோபாலபுரம் இல்லத்தில் போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. கோபாலபுரத்தில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் அசாதாரண சூழல் நிலவுவதால், போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர். சென்னை ராஜரத்தினம் மைதானத்தில் போலீஸார் தயார் நிலையில் உள்ளனர்.

இந்நிலையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் மற்றும் காவல் துறை டி.ஜி.பி ராஜேந்திரன் ஆகியோர் பேசியுள்ளனர் . பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து பேசியதாக தகவல்கள் கூறுகின்றன.

மேலும், தமிழகத்தில் நிலவும் சூழல் மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் பற்றி மத்திய உள்துறை அமைச்சகத்திடம் ஆலோசித்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

.