This Article is From Jul 09, 2020

ரவுடி விகாஸ் இத்தனை நாள் தப்பியது எப்படி? கைதுக்கு பின் எழும் அடுக்கடுக்கான கேள்விகள்!

விகாஸ் வெளியே வந்தபோது, அவரது பாதுகாவலர்கள் சூழந்துகொண்டனர். பின்னர் நடந்த மோதலை தொடர்ந்து, போலீசாரஸ் விகாஸை இழுத்துச்சென்றனர். அப்போது, “நான் விகாஸ் துபே. கான்பூரைச் சேர்ந்தவன்” என்று கத்திய படி சென்றுள்ளார்.

ரவுடி விகாஸ் இத்தனை நாள் தப்பியது எப்படி? கைதுக்கு பின் எழும் அடுக்கடுக்கான கேள்விகள்!

ரவுடி விகாஸ் இத்தனை நாள் தப்பியது எப்படி? கைதுக்கு பின் எழும் அடுக்கடுக்கான கேள்விகள்!

ஹைலைட்ஸ்

  • ரவுடி விகாஸ் துபே இத்தனை நாள் தப்பியது எப்படி?
  • கைதுக்கு பின் எழும் அடுக்கடுக்கான கேள்விகள்!
  • விகாஸ் துபே சரணடைந்தாரா? என அகிலேஷ் யாதவ் கேள்வி
Ujjain/ Lucknow/ Delhi:

8 காவலர்கள் கொலை உள்ளிட்ட 60க்கும் மேற்பட்ட வழக்குகளில் தேடப்பட்டு வந்த கான்பூர் ரவுடி விகாஸ் துபேவை மத்திய பிரதேசம் மாநிலம் உஜ்ஜைனில் போலீசார் இன்று காலை கைது செய்துள்ளனர். 

ரவுடி விகாஸ் கைதை தொடர்ந்து, இத்தனை நாட்களாக விகாஸ் மறைந்திருந்து எப்படி, கடைசியில் கோவிலில் பிடிப்பட்டது எப்படி என அடுக்கடுக்கான கேள்விகள் எழுந்துள்ளன. 

உஜ்ஜைனில் பிரபலமான மகாகல் கோவிலில் தரிசனம் மேற்கொள்ள வந்த விகாஸ் துபே, பின்பக்கம் வழியாக தப்பித்து செல்ல முயற்சித்த போது, போலீசார் சுற்றி வளைக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

விகாஸ் வெளியே வந்தபோது, அவரது பாதுகாவலர்கள் சூழந்துகொண்டனர். பின்னர் நடந்த மோதலை தொடர்ந்து, போலீசாரஸ் விகாஸை இழுத்துச்சென்றனர். அப்போது, “நான் விகாஸ் துபே. கான்பூரைச் சேர்ந்தவன்” என்று கத்திய படி சென்றுள்ளார். 

குற்றவாளி விகாஸ் துபே, ஹரியானாவின் ஃபரிதாபாத்தில் இருந்து ராஜஸ்தானின் கோட்டா வழியாக மத்திய பிரதேசத்தின் உஜ்ஜைன் வரை உத்தர பிரதேச நம்பர் பிளேட் கொண்ட காரில் 700 கி.மீ.தூரம் பயணம் செய்துள்ளார். 

இதுதொடர்பாக உத்தரபிரதேச மாநிலம் கான்பூரை சேர்ந்த காவல் ஆய்வாளர் மோஹித் அகர்வால் கூறும்போது, நாங்கள் அவரது கூட்டாளிகளில் பலரைப் பிடித்தோம், ஒரு சிலர் கொல்லப்பட்டனர். எனவே நிச்சயம் அவரது உயிரை காப்பாற்ற முயற்சித்திருப்பார் என்று கூறினார். 

இதனிடையே, காங்கிரஸ் தலைவர் பிரியங்கா காந்தி, விகாஸால் எந்த சோதனையும் செய்யப்படாமல் எவ்வாறு இவ்வளவு தூரம் பயணிக்க முடிந்தது என்று கேள்வி எழுப்பியுள்ளார். இதுதொடர்பாக அவரது ட்விட்டர் பதிவில், கான்பூரின் மிருகத்தனமான படுகொலைக்கு பின்னர் உத்தர பிரேதசம் அரசு துல்லியத்தன்மையுடன் செயல்பட தவறிவிட்டது. இத்தனை எச்சரிக்கைக்கு பின்னரும், குற்றம்சாட்டப்பட நபர் உஜ்ஜைன் வரை சென்றுள்ளது பாதுகாப்பு குறித்த தவறான நிலையை வெளிப்படுத்துகிறது. 

விகாஸ் துபே சரணடைந்தாரா அல்லது கைது செய்யப்பட்டாரா என்பதை உத்தர பிரதேச யோகி ஆதித்யநாத் அரசு தெளிவுபடுத்த வேண்டும் என்று சமாஜ்வாடி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் தெரிவித்துள்ளார். 

.