This Article is From Oct 27, 2018

“பாஜக இல்லாவிட்டால் இந்தியாவில் மன்னராட்சியை காங்கிரஸ் கொண்டு வந்திருக்கும்”

காங்கிரஸ் கட்சிக்கு எதிராக மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி கடுமையான விமர்சனங்களை முன் வைத்திருக்கிறார்

“பாஜக இல்லாவிட்டால் இந்தியாவில் மன்னராட்சியை காங்கிரஸ் கொண்டு வந்திருக்கும்”

பிரிவினைவாதத்தை மக்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள் என்று கூறுகிறார் அருண் ஜெட்லி.

New Delhi:

பாஜக இல்லாவிட்டால் இந்தியாவில் மன்னராட்சி முறையை காங்கிரஸ் கட்சி கொண்டு வந்திருக்கும் என்று மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி கடுமையாக விமர்சித்துள்ளார்.

டெல்லியில் முன்னாள் பிரதமர் வாஜ்பாய் நினைவுக் கூட்டத்தில் நிதியமைச்சர் அருண் ஜெட்லி பேசியதாவது-

நாடு சுதந்திரம் அடைந்ததற்கு பிறகு சுமார் 40 ஆண்டுகளாக காங்கிரஸ் கட்சி ஆட்சியில் இருந்துள்ளது. அக்கட்சி குடும்ப அரசியலைத்தான் வளர்த்திருக்கிறது.

காஷ்மீர், திபெத், சீனாவுடனான போர் என பல பிரச்னைகளின்போது வாஜ்பாய் திறமையாக செயல்பட்டு தீர்வுகளை அளித்தார். பாஜக மட்டும் இல்லாதிருந்தால் இந்தியாவில் மன்னராட்சி முறையை காங்கிரஸ் கட்சி கொண்டு வந்திருக்கும்.

பஞ்சாப் மற்றும் தெற்கு பகுதியில் நீடித்த பயங்கரவாத அச்சுறுத்தல்களை முடிவுக்கு கொண்டு வந்துள்ளோம். ஆனால் காஷ்மீர் மற்றும் மாவோயிஸ்ட் பிரச்னைகள் நீடித்து வருகிறது.

பிரிவினைவாதத்தை மக்கள் ஏற்றுக் கொள்ளமாட்டார்கள் என்பதைத்தான் தற்கால அரசியல் நமக்கு கற்றுத் தருகிறது. சில முக்கிய கட்சிகள் மாவோயிச கொள்கைகளுக்கு மதிப்பளிக்கின்றன.

எதிர்க்கட்சிகளுக்கு மதிப்பளிப்பதில் வாஜ்பாய் முன் உதாரணமாக இருந்தார். ஜவகர் லால் நேருவுக்கு நாடாளுமன்றத்தில் மரியாதை செலுத்தும் நிகழ்ச்சியின்போது, வாஜ்பாய் நடத்திய வாழ்த்துரை மிகச் சிறந்ததாக அமைந்தது.
இவ்வாறு அவர் கூறினார்.

.