This Article is From Aug 05, 2020

அயோத்தி ராமர் கோவில் பூமி பூஜையில் கலந்துகொண்ட உமா பாரதி!

Ayodhya Ram Temple Event:பூமி பூஜை நடக்கும் சமயத்தில், அவர் வேறு இடத்தில் இருப்பேன் என்றும் தெரிவித்திருந்தார்.

அயோத்தி ராமர் கோவில் பூமி பூஜையில் கலந்துகொண்ட உமா பாரதி!

Ayodhya Ram Temple Event: அயோத்தி ராமர் கோவில் பூமி பூஜையில் கலந்துகொண்ட உமா பாரதி!

Ayodhya/ New Delhi:

மூத்த பாஜக தலைவர் உமா பாரதி நேற்று முன்தினம் கொரோனா வைரஸ் முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாக ராமர் கோவில் பூமி பூஜையில் கலந்துகொள்ள மாட்டேன் என்று கூறியிருந்த நிலையில், இன்று காலை விழாவில் கலந்துகொள்வேன் என்று தெரிவித்தார். 

இதுதொடர்பாக அவரது ட்விட்டர் பதிவில், ராம ஜென்ம பூமியை சேர்ந்த மூத்த அதிகாரி ஒருவர் பூமி பூஜை நடக்கும் இடத்தில் இருக்கும் படி கேட்டுகொண்டார். அதனால், நிகழ்ச்சியில் கலந்துகொள்கிறேன் என்று அவர் கூறினார். 

இதுகுறித்த காட்சிகளில் உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், ராம்ஜென்ம பூமிக்கு வருகை தந்த உமா பாரதியை கைகூப்பி வரவேற்றார். அப்போது, இரு தலைவர்களும் முகக்கவசம் அணிந்திருந்தனர். 

முன்னதாக, கொரோனா வைரஸ் தொற்று பரவல் முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாக அயோத்தி ராமர் கோவில் பூமி பூஜையில் கலந்துகொள்ள மாட்டேன் என உமா பாரதி தெரிவித்திருந்தார். 

இதுகுறித்து அவரது ட்விட்டர் பதிவில் அமித்ஷா உள்ளிட்ட பாஜக தலைவர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து, அயோத்தி நிகழ்ச்சியில் கலந்துகொள்ள உள்ளவர்கள் குறித்து கவலை எழுந்துள்ளது. குறிப்பாக பிரதமர் மோடி குறித்து கவலை எழுகிறது என்று அவர் தெரிவித்திருந்தார். 

மேலும், போபாலில் இருந்து ரயில் மூலம் அவர் உத்தர பிரதேசம் பயணிக்க உள்ளதாகவும், அதனால், அங்கு பிரதமர் நரேந்திர மோடியையும், "ஆயிரக்கணக்கானவர்களையும் கோவிலுக்குள் பாதுகாப்பாக இருக்க அயோத்தி பூமி பூஜையில் கலந்துகொள்வதை தவிர்க்க முடிவு செய்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். 

பூமி பூஜை நடக்கும் சமயத்தில், அவர் வேறு இடத்தில் இருப்பேன் என்றும் தெரிவித்துள்ளார். ரயில் பயணத்தின் போது இடையில், எனக்கு கொரோனா பாதிப்பு ஏற்படலாம், இந்த சூழ்நிலையில், பிரதமர் மோடி உள்ளிட்டவர்கள் பங்கேற்கும் இடத்தில் இருந்து நான் விலகியிருப்பேன். அவர்கள் அனைவரும் அங்கிருந்து சென்ற பின்னர், நான் அங்கு செல்வேன் என்று கூறியிருந்தார். 

கொரோனா     வைரஸ் பரவலை கருத்தில் கொண்டு, கட்சியின் மூத்த தலைவர் எல்.கே.அத்வானி, முரளி மனோகர் ஜோஷி உள்ளிட்டவர்கள் காணொளி காட்சி மூலம் பங்கேற்பார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.  

.